
Cinema News
மூத்த நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்… திரையுலகினர் இரங்கல்…
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ரங்கம்மா பாட்டி. குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தன. ‘போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா’ என வடிவேலுவுடன் அவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள தெலுங்கு பாளையம். சிறுவயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு நாடகத்தில் நடிக்க துவங்கியவர். எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் இவர்
நடித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 2 படத்தில் நடித்திருந்தார். ரசிகர்களை கவர்ந்த ரங்கம்மா பாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வந்தார். அவருக்கு திரையுலகினர் யாரும் உதவவில்லை.
இந்நிலையில், அவரது வீட்டில் இன்று மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.