80களில் நடித்த பிரபல சிங்கப்பூர் நடிகை இவர்...! இப்போது பார்த்தால் நம்பவே மாட்டீங்க..!
தமிழ்ப்பட நாயகிகள் பிற மாநிலங்களில் இருந்து வந்து நடித்து ஹிட் ஆனதுண்டு. அதே போல் தமிழ்நாட்டில் இருந்தும் நாயகிகள் பிற மாநில மொழிப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளனர். ஆனால் பிற நாடுகளில் இருந்து வந்து தமிழ்படத்தில் நடித்து சாதித்தார் என்றால் அது பெரிய விஷயம் தான்.
அப்படிப்பட்ட ஒரு பிரபலமான தமிழ்ப்பட நடிகையைப் பற்றித் தான் இப்போது பார்க்க உள்ளோம்.
இவர் சிங்கப்பூரில் இருந்து இங்கு வந்து தமிழ்ப்படம் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். 1980களில் இவரது படங்கள் அனைத்தும் ஹிட் தான். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்பட பல மாநில மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
1985ல் இயக்குனர் இமயம் பாரதிராஜா தான் தனது முதல்மரியாதை படத்திற்காக இவரை அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே எவ்வித பயமுமின்றி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார் ரஞ்சனி. ரசிகர்கள் மற்றும் தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்றார்.
கள்ளங்கபடமற்ற இவரது நடிப்பு இவருக்கு பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வைத்தது. கடலோரக்கவிதைகள், நீ தானா அந்தக்குயில், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம், குடும்பம் ஒரு கோவில், பரிசம் போட்டாச்சு, அருள் தரும் ஐயப்பன், வெளிச்சம், தாய் மேல் ஆணை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது உடல் பருமனாகி விட்டார்.
அவர் தனது சினிமா அனுபவங்களை இங்கு பகிர்கிறார்.
சின்ன வயசுல நான் சிங்கப்பூர்ல இருந்து வந்து ஒரு வில்லேஜூக்கு வந்து படம் நடிக்கறது ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருந்தது. அந்த ஊர்ல டாய்லட் பார்க்கறதே கஷ்டம். பார்க்கறது எல்லாமே டாய்லட் தான். அந்தக்காலத்தில கேரவன்லாம் கிடையாது. எல்லாமே எனக்கு அனுபவங்கள் தான்.
மண்ணுக்குள் வைரம் படத்தில் சிவாஜிகணேசன், சுஜாதா, ராஜேஷ், முரளி இவங்களோட நடிச்சது நல்ல அனுபவம். இது மனோஜ்குமார் சார் படம் தான். இதுல சித்ராங்கற கேரக்டர்ல வருவேன்.
மலையாளத்துல முதல் படம் சுவாதி திருநாள். அப்போ 4 தமிழ்ப்படங்களை கேன்சல் பண்ணிட்டுத் தான் இந்தப்படத்திற்கு ஒத்துக்கிட்டேன். அப்போ வில்லேஜ் கேரக்டர்னா என்னைத் தான் போடுவாங்க. முதல்மரியாதைக்கு அப்புறம் அது மாதிரி கேரக்டர்கள் தான் வந்தது. சுவாதி திருநாள் ஒரு வரலாற்றுப்படம்.
பரதநாட்டியத்தை மையமாக கொண்டு வந்தது. அந்தப்படம் தேசிய விருதைப் பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 5 வருடத்திற்குள் 5 படங்கள் மூவி என்சைக்ளோபீடியாவுல ரெக்கார்டா ஆகியிருக்குறது எனக்கு பெருமை.
இப்பவும் கொஞ்சம் நல்ல ரோல் கிடைச்சாத் தான் நடிப்பேன். ஆனா இப்ப இருக்குற நிலைமைல என்னால ஹீரோயினா ஆக்ட் பண்ண முடியாது. கொஞ்சம் நல்ல கேரக்டர் ரோலா இருந்தா நடிப்பேன்.
அப்போ எல்லாம் பிலிம் ரோல். இப்ப எல்லாமே டிஜிட்டல் மயமாகி விட்டது. அந்தக்காலத்துல இன்னோரு டேக் எடுத்தாலே சத்தம் போடுவாங்க. இப்போ எத்தனை டேக் வேணும்னாலும் எடுத்துக்கலாம். அந்தக்காலத்துல மானிட்டர் எல்லாம் கிடையாது. டைரக்டர் பார்த்து ஓகே சொன்னா தான் உண்டு.
அப்போ எல்லாருமே டைரக்டர் ஆகறதுக்கு முன்னாடி நிறைய படங்கள்ல அசிஸ்டண்டா இருந்து தான் வருவாங்க. இப்போ உள்ள நிலைமைல யாரு வேணாலும் திறமை இருந்தா டைரக்டராகலாம். டெக்னாலஜி வந்து வளர்ந்து கிட்டே தான் இருக்கும். முன்னாடி எல்லாருமே ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவாங்க. இப்போ டச் இல்ல. ஷாட் வரும்போது தான் நம்மகிட்ட பேசுவாங்க என்கிறார்.
80களின் இறுதியில் உரிமை கீதம், சகலகலா சம்மந்தி, டில்லி பாபு, எல்லாமே என் தங்கச்சி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான டில்லி பாபு சிறந்த நகைச்சுவைப் படமாகத் திகழ்ந்தது. அதே போல் குடும்ப கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களை இயக்கும் விசுவின் இயக்கத்தில் வெளியான சகலகலா சம்மந்தி, எல்லாமே என் தங்கச்சி ஆகிய படங்களிலும் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார் ரஞ்சனி.
1990ல் கல்யாண ராசி மற்றும் 1991ல் சார் ஐ லவ் யூ ஆகிய படங்களில் நடித்தார்.