‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ ரஞ்சனியை நியாபகம் இருக்கிறதா? இப்ப என்ன செய்றார் பாருங்க

Actress Ranjani: சினிமாவைப் பொறுத்த வரைக்கும் காலங்காலமாக புதுப்புது நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றனர். அதுவும் வேற வேற மாநிலத்திலிருந்து எல்லாம் நடிகைகள் இந்த தமிழ் சினிமாவில் நடிக்க வருகின்றனர். இதில் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் சினிமாவை தேடி பல நடிகைகள் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகள் கேட்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

உதாரணமாக லண்டன் இறக்குமதி ஆன எமி ஜாக்சன். அதைப்போல 2010 இலங்கையிலிருந்து இறக்குமதியான பூஜா. பூஜா கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பிசியாக அதுவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதைப்போல பாரதிராஜாவால் அறிமுகமான நடிகை தான் ரஞ்சனி. இவர் சிங்கப்பூரிலிருந்து தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்.

இதையும் படிங்க: அவர் வேற மாதிரி.. சான்சே இல்ல!.. விஜயகாந்திடம் இதைத்தான் கற்றுகொண்டேன்!. உருகும் சுகன்யா..

இவருடைய உண்மையான பெயர் சாசா செல்வராஜ். பாரதிராஜா பொருத்தவரைக்கும் அவருடைய அக்மார்க் பெயரான ரா வரிசையில் இவர் பெயரும் அமைய வேண்டும் என்பதால் சாசா செல்வராஜ் என்பதை ரஞ்சனி என மாற்றினார். இவரை எளிதாக அடையாளம் காண உறுதுணையாக அமைந்த பாடல் என்னவென்றால் அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என்ற பாடல் ஆகும்.

முதல் மரியாதை படத்தில் அமைந்த இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அந்தப் படத்தில் செவுலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ரஞ்சனி. ஒரு பாடல் தான் ரஞ்சனியை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலப்படுத்தியது. அதன் மூலம் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மோகன்லாலுடன் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகின.

இதையும் படிங்க: பாக்கியராஜ் படத்தில் சிவாஜி நடிக்க இதுதான் காரணமாம்..! மனுஷனுக்கு எவ்ளோ பெரிய மனுசு..!

மலையாளத்தில் இவர் நடித்த முதல் படமான சுவாதி திருநாள் திரைப்படம் தேசிய விருதை பெற்றது. அதிலிருந்து தமிழிலும் மலையாளத்திலும் படு பிசியாக நடித்த ரஞ்சனி தமிழில் இவர் நடித்த மண்ணுக்குள் வைரம், ஆயுசு நூறு, பரிசம் போட்டாச்சு, போன்ற பல படங்கள் நல்ல கதைகளைத்தோடு வெளிவந்த திரைப்படங்களாக அமைத்தன.

தமிழில் 1985 ஆம் ஆண்டில் வெளியான முதல் மரியாதை திரைப்படம் தான் ரஞ்சனி நடித்த முதல் திரைப்படம் ஆகும். முதல் படத்திலிருந்து ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிங்கப்பூரிலிருந்து வந்தவர் என்றாலும் செவுலி கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்து மண்வாசனையுடன் கூடிய ஒரு பெண் எப்படி இருப்பாரோ அதைப்போல எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் ரஞ்சனி. இப்படி ஒரு பத்து ஆண்டு காலம் முன்னணி நடிகையாக இருந்த ரஞ்சனி அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இப்போது ஒரு பெரிய தொழிலதிபராக இருந்து கொண்டு வருகிறாராம் ரஞ்சனி.

இதையும் படிங்க: பகத் பாசிலுக்கு இப்படி ஒரு நோயா?!. குணப்படுத்த முடியுமா?!… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!..

 

Related Articles

Next Story