தமிழ் சினிமா ரசிகர்களின் எகிற செய்யும் பரபர துருதுரு நடிகை இவர்தாங்க!..
எப்போதுமே புன்னகை தவழும் பெண்களின் முகம் என்றால் அனைவருக்குமே பிடித்துப் போகும். அவர் சாதாரணப் பெண்மணியாக இருந்தாலும் கூட இந்தப் புன்னகைக்குத் தான் மவுசு அதிகம். அப்படி இருக்கும் போது அவர் ஒரு கியூட்டான இளம் நடிகையாக இருந்தால் எவ்வளவு பேர் ரசிப்பார்கள்?
அத்தனை பேரும் அவரது அழகுக்கு அடிமை தான். அந்த வகையில் தற்போது இந்திய சினிமா உலகையே கலக்கிக் கொண்டு இருக்கும் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். வாங்க இவரைப் பற்றிப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பட் என்னும் இடத்தில் ஏப்.5 1996ல் பிறந்தார். அப்பா சுமன் மந்தனா. அம்மா மந்தா. இவருக்கு சீமன் என்ற ஒரு சகோதரியும் உள்ளார். கொடகுக்கூர் பப்ளிக் பள்ளியில் படிப்பை முடித்தார். தொடர்ந்து மைசூரில் உள்ள ராமையா ஆர்ட்ஸ் அண்டு காலேஜில் டிகிரி படித்துள்ளார்.
படிப்பின் மேல் இருந்த ஆர்வம் காரணமாக சைக்காலஜி, ஜேர்னலிசம், இங்கிலீஷ் லிட்டரேச்சரும் படித்துள்ளார். எனக்கு என்னுடைய மொழியையே சரியாப் பேசத் தெரியாது. அப்படி இருக்கும்போது இந்தியாவுல எவ்வளவு மொழிகள் இருக்கு.
எவ்வளவு கல்சர் இருக்கு? எல்லாத்தையும் ரிசர்ச் பண்ற ஆர்வமும், ஆசையும் எனக்குள்ள வந்தது. ஒரு விஷயத்தைக் கத்துக்கணும்கற ஆர்வம் எனக்குள்ள வந்துட்டுன்னா அதைத் தேடித் தேடிக் கத்துக்குவேன். அதனால தான் நான் ஜேர்னலிசமே படிச்சேன்.
அதே மாதிரி தான் இவருக்குக் கிடைக்குற எந்த ஒரு சான்ஸையும் மிஸ் பண்ணவே மாட்டாராம். அப்படித் தான் இவருக்குக் காலேஜ் படிக்கும்போது மாடலிங்கில் ஒரு வாய்ப்பு கிடைச்சது. 2012ல் நடந்த ஒரு மாடலிங்கில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இவருக்கு கன்னடப் படத்தில் நடிக்குற வாய்ப்பும் கிடைச்சது. 2016ல் வெளியான கிரிக் பார்டி என்ற கன்னடப்படத்தில் நடித்தார்.
படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து இவருக்கு சைமா விருதும் கிடைத்தது. தொடர்ந்து இவர் கன்னடத்தில் நடித்த 3 படங்களுமே வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் வந்த பத்திரிகைகளிலும் இவரைப் பற்றிய கட்டுரைகள் போட ஆரம்பிச்சாங்க. இதைப் பார்த்ததும் தெலுங்கு இயக்குனர்கள் அழைப்பு விடுக்க 2018ல் 3 தெலுங்கு படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீத கோவிந்தம் படம் பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கு திரை உலகையே கலக்கி வருகிறார். தளபதி 64ல் இவர் தான் நடிக்கப்போவதாக வதந்திகள் வந்தது. ஆனால் மாளவிகா மோகனன் தான் நடித்தார். கார்த்தியுடன் 2021ல் சுல்தான் படத்தில் நடித்து அசத்தினார்.
இதுதான் தமிழில் இவர் நடித்த முதல் படம். பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது இந்தப் படம். அப்போது முதலே தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகை ஆகிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதனால் இவர் மேல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போது இருந்தே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
நான் ஒவ்வொரு ஸ்டெப்பா சினிமாவில் சக்ஸஸ் பண்ணிக்கிட்டு வாரேன். ஆனால் இதெல்லாம் பார்க்க அப்பா இல்லன்னு ரொம்பவே ஃபீல் பண்ணினார் ராஷ்மிகா. பயணம் செய்வதும், ஜிம்முக்குப் போவதும் தான் இவரது பொழுதுபோக்கு.
தமிழ்சினிமாவுலகில் தளபதி விஜயை ரொம்பவே பிடிக்குமாம். சின்ன வயசுல அப்பாவோடு சேர்ந்து கில்லி படத்தைத் தியேட்டரில் பார்த்துள்ளார். அப்போ இருந்தே இவர் தளபதி ரசிகராக ஆகிவிட்டார்.
தளபதியை ஒரு தடவைப் பார்க்கணும் என்றும் இருக்கிறார். தற்போது இவரது நடிப்பை அப்டேட் பண்ணி எப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என பயிற்சி செய்து வருகிறார். இப்போது விஜய் சேதுபதியோட நடிப்பை ரசித்து ரசித்துப் பார்த்து எப்படி நடிக்கணும்னும் கற்று வருகிறார்.
இவர் எல்லாவற்றையும் பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்கிறார். இவருக்கும் கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டிக்கும் 2017ல் நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரு சில காரணங்களால 2018ல் இவங்களோட கல்யாணம் பிரேக் அப் ஆனது. இந்த பிரேக் அப் தான் இவரோட வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனால தான் இவங்க வாழ்க்கையில எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து முன்னுக்கு வரணும்கறதையேக் கத்துக்கிட்டாங்களாம். இந்த ஒரு விஷயம் தான் இவரோட மனதை ரொம்பவே திடமாக்கியிருக்கு. இவரோட அம்மாவும் இவரை வளர்ந்த குழந்தைன்னு சொல்லியிருக்காங்க. என்னுடைய அம்மாவும் தங்கச்சியும் தான் உலகம்.
என்னோட ரசிகர்களுக்காக நான் நிறைய படங்களைப் பண்ணிக்கிட்டே இருப்பேன்னும் சொல்லியிருக்காங்க. வாழ்ந்துக்கிட்டு இருக்குற ஒவ்வொருத்தருக்கும் சந்தோஷங்கள், வேதனைகள், வலிகள்னு நிறைய இருக்கும். ஆனா இதை எதுவுமே வெளிக்காட்டாம எப்போதும் முகத்தில் புன்னகைத் தவழக் காட்சி அளிப்பது தான் ராஷ்மிகாவின் தனிச்சிறப்பு.