விஜயோட தீவிர ரசிகை...ஆனா...கத்துக்கிட்டதோ விஜய் சேதுபதிக்கிட்ட இருந்து...! இதெப்படி இருக்கு...?
தமிழ்சினிமாவில் கியூட்டான நடிகைகள் பலர் உண்டு. ஆனால் முதல் படத்தில் மட்டுமல்லாமல் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா தான்.
இவர் மற்ற மொழிப்படங்களில் கொடுத்த வெற்றியைத் தொடர்;ந்து தமிழிலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவரைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஒரே ஒரு பாடல் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவரது வெற்றிக்குக் காரணம் என்ன? யாரைப் பார்த்து இவர் மோட்டிவேட் ஆனாங்க? இவங்களோட அபார நடிப்புக்கு காரணம் என்ன? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் நமக்குள் ஓடும். இவற்றிற்கு விடைகாண வாருங்கள்...பார்க்கலாம்.
இவர் கர்நாடகாவில் உள்ள விராஜ்பெட்டில் 5.4.1996ம் தேதியன்று பிறந்தார். தந்தை சுமன்மந்தனா, தாயார் மந்தா. இவருக்கு சீமன் என்ற சகோதரியும் உள்ளார். பொடகுகூர் பப்ளிக் ஸ்கூலில் படித்தார். மைசூரில் உள்ள ராமையா ஆர்ட்ஸ் அண்ட் காலேஜில் டிகிரி முடித்தார்.
படிப்பு மேல இருந்த ஆர்வத்தால சைக்காலஜி, ஜானர்லிசம், இங்கிலீஷ் லிட்டரேச்சரும் படிச்சிருக்காங்க. ஏன் இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாம படிச்சிருக்காங்கன்னு நினைக்கலாம். இதற்கு ராஷ்மிகா இவ்வாறு சொல்கிறார்.
எனக்கு என்னோட மொழியையே ஒழுங்கா பேசத் தெரியாது. இந்தியாவில எத்தனை மொழிகள் இருக்கு? எவ்வளவு கலாச்சாரம் இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்கு ஆசை. எல்லாத்தையுமே ஆராயணும்கற ஆசை எனக்குள்ள வந்தது.
எனக்கு ஒரு விஷயத்தைக் கத்துக்கணும் ஆர்வம் வந்துச்சுன்னா அதைத் தேடித் தேடிக் கத்துப்பேன். அதனால தான் ஜானர்லிசம் படிச்சேன்.
இவரோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா இவங்களுக்குக் கிடைக்குற எந்த ஒரு வாய்ப்பையுமே தவற விடுறதில்லையாம். அதை நல்லா பயன்படுத்திக்குவாங்களாம்.
அப்படித் தான் இவங்களுக்குக் காலேஜ் படிக்கும்போது மாடலிங்ல ஒரு வாய்ப்பு கிடைச்சது. அதை இவங்க சரியா பயன்படுத்திக்கிட்டாங்க. 2012ல் நடந்த ஒரு மாடலிங் போட்டில வெற்றி பெற்றிருக்காங்க.
தொடர்ந்து கன்னட படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்த வகையில் 2014ல் வெளியான பிரிக் பார்ட்டிங்கற படத்துல நடிச்சாங்க. அந்தப் படமோ பிளாக் பஸ்டர் ஹிட். படத்தோட அபார வெற்றியால ரசிகர் பட்டாளமே உருவானது. படத்திற்கு சைமா விருதும் கிடைச்சிருக்கு.
கன்னடத்துலயே 3 படங்கள் நடிச்சிருக்காங்க. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று இருக்காங்க. 2018ல் தெலுங்கு திரையுலகம் இவரை வாஞ்சையோடு வரவேற்றது. அங்கும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து இருக்காங்க ராஷ்மிகா.
இவற்றில் விஜய் தேவகொண்டாவோட நடிச்ச கீத கோவிந்தம் படம் பிளாக் பஸ்டர் ஹிட். தொடர்ந்து தெலுங்குல வெற்றி நடை போட்டு வர்றாங்க.
தளபதி விஜய் உடன் இவர் நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு மாளவிகா மோகனன் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. அதன்பிறகு கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்தில் நடித்து அசத்தினாங்க.
இப்படி நான் படத்துல நடிச்சி மாஸாகிட்டு வர்றேன். ஆனா இதையெல்லாம் பார்க்க எங்க அப்பாவுக்குத் தான் கொடுத்து வைக்கலன்னு வருத்தப்பட்டும் இருக்காங்க.
தளபதி விஜயோட தீவிர ரசிகையாம். சின்ன வயசுல அப்பா கூட சேர்ந்து தியேட்டருக்குப் போயி கில்லி படம் பார்த்தாங்களாம். அப்போ இருந்தே இவங்க தளபதி ரசிகையாம்.
விஜய் சேதுபதி நடிப்பைப் பார்த்து பிரமிச்சிப் போன இவர், எப்படி நடிக்கணும்னு கத்துக்கிட்டு இருக்காங்களாம்.
இவர் எந்த ஒரு விஷயத்தையும் பாசிடிவ்வாக எடுக்கறது தான் இவரோட வெற்றிக்குக் காரணம். இவருக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் 2017ல நிச்சயதார்த்தம் நடந்து 2018ல சில காரணங்களால நின்று பிரேக் அப் ஆனது.
இதுவே இவங்க வாழ்க்கையில பல பிரச்சனைகளை நல்ல கையாளவும் காரணமா அமைஞ்சது. என்னோட அம்மாவும், தங்கச்சியும் தான் எனது உலகம். ரசிகர்களுக்காக நிறைய படங்கள் பண்ணிக்கிட்டு இருப்பேன் என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இவரோட அம்மாவோ இவங்களை வளர்ந்த குழந்தைன்னு சொல்றாங்க. பார்க்க அமுல் பேபி மாதிரி தானே இருக்காங்க. அதனால தான் அப்படி சொல்லிருக்காங்க.
மனசுல எவ்ளோ கவலைகள் இருந்தாலும் அதை எல்லாம் வெளிக்காட்டாம சந்தோஷத்தை மட்டும் ஸ்மைலாக வெளிப்படுத்தணும்னு நமக்கு சொல்லித் தர்றாங்க இந்த வளர்ந்த குழந்தை ராஷ்மிகா ஸ்மைலோட.