அந்த ஒரு காட்சியில் நடிச்சது தப்பா? என்னது 9 நிமிஷமா.. ‘அனிமல்’ படம் பற்றி வாய்திறந்த ராஷ்மிகா

by Rohini |   ( Updated:2024-04-05 09:19:39  )
rashmik
X

rashmik

Actress Rashmika Mandhana: இந்திய அளவில் மிகவும் க்ரஷான நடிகை என்றால் நடிகை ராஷ்மிகா மந்தனாதான். அவருடைய க்யூட் எக்ஸ்ப்ரஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.வித விதமான முக பாவனைகளை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு பேன் இந்திய நடிகையாகவே மாறிவிட்டார். இப்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர்.

இவரின் நடிப்பில் கடைசியாக உருவான படம் ‘அனிமல்’. ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷ்மிகா இந்தப் படத்தில் உச்சக்கட்ட சில காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார். உதட்டு முத்த காட்சிகளில் இருவரும் அதிகமாகவே இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் முகம் சுழிக்கும் சில காட்சிகளிலும் ராஷ்மிகா நடித்திருந்தார்.

இதையும் படிங்க: விக்ரமை தவிர்த்து அஜித்துக்கு குரல் கொடுத்த மற்றொரு பிரபல நடிகர்! அட அது அவர் வாய்ஸா?

வசூல் ரீதியாக அனிமல் திரைப்படம் பெரிய வசூலை பெற்றாலும் விமர்சனத்தில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த நிலையில் அனிமல் படம் குறித்து ராஷ்மிகா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது இப்போது வைரலாகின்றது. ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் படமாக அனிமல் திரைப்படம் அமைந்தது . ஆனால் இது தந்தைக்காக எந்த எல்லைக்கும் போகும் ஒரு மகனின் கதை என ராஷ்மிகா கூறினார்.

அதனால் இது ஒரு கதாபாத்திரம். கதாபாத்திரத்தை மட்டும் பாருங்கள் என்று கூறியிருந்தார். மேலும் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே ராஷ்மிகா ஒரு காட்சிக்காக மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார். வட இந்தியாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ‘கர்வா சௌத்’. தன் கணவருக்காக மனைவி உண்ணாவிரதமிருந்து கணவரின் ஆயுளுக்காக நோன்பு இருக்கும் ஒரு நிகழ்வு தான் இந்த கர்வா சௌத்.

இதையும் படிங்க: நான் ஊர் ஊரா போறேனா? என்னை பாத்து இப்படி சொல்லிட்டீங்களே… மனமுடைந்த அஜித்..

இதில் ராஷ்மிகா நடித்திருந்ததை அனைவரும் ட்ரோல் செய்திருந்தார்கள். இதை பற்றி ராஷ்மிகா கூறுகையில் ‘மொத்தமே 9 நிமிட காட்சிதான். படப்பிடிப்பில் இருந்த அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் என்னவோ மக்களுக்கு பிடிக்கவில்லை.’ என்று கூறி இப்போதுள்ள மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறியிருந்தார்.

Next Story