அந்த நடிகர பகைச்சிக்கலாமா?.. ராஷ்மிகாவிற்கு படங்களில் நடிக்க தடையா?..
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பெரிய பெரிய பட்ஜெட் உள்ள படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகியிருக்கிறார். தற்போது மாபெரும் பொருட்செலவில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
அதனையடுத்து மீண்டும் புஷ்பா - 2வில் இணைய இருக்கிறார். மேலும் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகாவிற்கு வாரிசு இரண்டாவது தமிழ் படமாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என முன்னனி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
ஹிந்தியில் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ராஷ்மிகாவிற்கு எதிராக கன்னட திரையுலகமும் ரசிகர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது அவரின் கன்னட மொழியில் நடிப்பதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
காரணம் என்னவெனில் ராஷ்மிகா 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் உருவான கிரிக் பார்டி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தின் தயாரிப்பாளர் ரக்ஷித் ஷெட்டி தான் படத்தின் ஹீரோவும் கூட. இவருக்கும் ராஷ்மிகாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த ரிலேஷன்ஷிப் ஸ்டாப் ஆனது.
ஏனெனில் அந்த சமயத்தில் ராஷ்மிகாவிற்கு நிறைய ஹிட் படங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. இந்த திருமணம் அவரின் கெரியரை பாதிக்கும் என கருதி திருமண பந்தத்தில் இருந்து விலகி விட்டார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா தன் அறிமுகமான கிரிக் பார்டி படத்தை பற்றி பெருமையாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் போது அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை பற்றியோ ரக்ஷித் ஷெட்டி பற்றியோ எதுவும் பேசவில்லையாம். இதனால் கோபமடைந்த கன்னட திரையுலகம் பெரும் அதிப்தியில் இருந்திருக்கின்றனர்.
ஏனெனில் ரக்ஷித் ஷெட்டிக்கு கன்னடத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி இருக்கும் போது அறிமுகமான படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை பற்றி எதுவும் குறிப்பிடாத ராஷ்மிகாவிற்கு எதிராக மக்கள் திரண்டுள்ளனர். நடிக்கக் கூடாது எனவும் கூறிவருகின்றனர்.மேலும் இந்த கண்டனத்தால் பேன் இந்தியா மூவியாக உருவாகி வரும் வாரிசு மற்றும் புஷ்பா - 2 ஆகிய படங்களில் நடிக்கவும் ராஷ்மிகாவிற்கு எதிர்ப்பு வரும் என கூறப்படுகிறது.