ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. பிறந்த நாளில் ரட்சிதா கொடுத்த அதிரடி அறிவிப்பு..

ratchitha
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரட்சிதா. ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பரீட்சையமானார் ரட்சிதா.எடுப்பான தோற்றம், அழகான முகம், முத்துப் போன்ற பற்கள் என ஒரு அம்சமான நடிகையாக வலம் வந்தார் ரட்சிதா.
அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.அதுவும் போக விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் சீசன் 6’ல் பங்கு கொண்டு மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.அவரை இறுதிவரை கொண்டு சென்று மக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.

கொஞ்ச நாள்கள் டிவி பக்கமே வராத ரட்சிதாவை பிக்பாஸ் மூலம் தான் மக்கள் மீண்டும் பார்த்தார்கள். அந்த நிகழ்ச்சியின் மூலமும் மீண்டும் பிரபலமானார். இந்த நிலையில் தனது பிறந்த நாளை ஏப்ரல் 24 ஆம் தேதி ரட்சிதா கொண்டாடினார். அப்போது அவருக்கு அவரே ஒரு காரை வாங்கிக் கொண்டு தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் ஒரு புதிய படத்திலும் லீடு ரோலில் நடிக்கிறாராம் ரட்சிதா. புதுமுக இயக்குனர் பிரவீன் இயக்கும் ‘மெய் நிகரே’ என்ற படத்தில் ரட்சிதா லீடு ரோலில் நடிக்கிறாராம். பெண்களை மையப்படுத்தி எடுக்கும் அந்தப் படத்தில் ரட்சிதா லீடு ரோலில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க : கதையும் பிடிக்கல.. இயக்குனரும் பிடிக்கல..! – விஜயகாந்த் அரை மனதோடு நடித்து ஹிட் அடித்த திரைப்படம்…