பொண்ணுனா அத காட்டு...! தொகுப்பாளினியிடம் க்ளாமரா பேசிய இரவின் நிழல் பட பிரபலம்...!
பார்த்திபன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரவின் நிழல். இந்த படத்தில் அரை நிர்வாணமாக, மார்பு தெரியுமளவு (ஆனால் அது கவர்ச்சியாக இருக்காது ) நடித்து அதிர்வலையை கிளப்பியவர் நடிகை ரேகா நாயர்.
இவர் பிரபல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தான் தெரிந்த முகமாக மாறியுள்ளார். படத்தில் நடித்தது போலவே, பல பேட்டிகளில் தனது வெளிப்படையான கருத்துக்கள் அது சர்ச்சையாக மாறினாலும் பரவாயில்லை என தனது கருத்தை பகிரங்கமாக முன்வைக்கிறார்.
அப்படி தான், அண்மையில் நடிகை ஷகீலா உடன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு ஷகீலா கேட்ட கேள்விகளுக்கு பல சர்ச்சையான பதிலை கொடுத்து மிகவும் பிரபலமானார் ரேகா நாயர். இந்த நிலையில் மீண்டும் ஒரு பேட்டியில் கேள்வி கேட்ட தொகுப்பாளினியிடம் க்ளாமராக பேசி முகம் சுழிக்க வைத்திருக்கிறார்.
அதாவது அந்த தொகுப்பாளினி ஒரு கேள்வி கேட்க ரேகா நாயரோ ஏன் உங்க துப்பட்டாவை மறைக்கிற மாதிரி போட்டிருக்கீங்க? கொஞ்சம் கீழே இறக்கி போடுங்க.அப்பொழுது தான் நம் அழகு தெரியும் எனவும் அந்த அழகை அப்பொழுது தான் எல்லாரும் ரசிப்பார்கள் எனவும் கூறியுள்ளார். இந்த செய்தி தான் இப்பொழுது வைரலாகி வருகின்றது.