Pushpa 2: படமே ரிலீஸ் ஆகப்போகுது... ஆனாலும் 'அந்த' பிரச்சினை இன்னும் நீளுது!

by சிவா |   ( Updated:2024-11-15 11:19:44  )
pushpa
X

#image_title

Pushpa 2: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், மலையாள நடிகர் பஹத் பாசில், கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் புஷ்பா 2. செம்மர கட்டைகள் கடத்தலை வைத்து வெளியான இப்படத்தில் கண்டெண்ட் பெரிதாக இல்லை.

சமந்தா: சமந்தாவின் ஊ சொல்றியா பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஆகியவற்றால் எதற்கு ஓடுகிறது என்றே தெரியாமல் தியேட்டரில் இப்படம் தாறுமாறாக ஓடியது. இதைப்பார்த்த படக்குழு பார்ட் 2 வை பயங்கர பட்ஜெட்டில் எடுத்து வைத்துள்ளது. டிசம்பர் 5ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: ‘ஸாரி’ கேக்க முடியாது… விஜய் சேதுபதியை எதிர்த்த போட்டியாளர்?

இந்த நிலையில் படத்தில் இன்னும் ஒரு சிக்கல் நீடித்து வருகிறது. அதாவது படத்தின் அயிட்டம் பாடலுக்கு ஆட இன்னும் ஒரு நடிகை கிடைக்காமல் படக்குழு அலையோ அலை என அலைந்து திரிகின்றனர். சொல்லப்போனால் படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கதை என எதுவுமில்லை. இதனால் ஒரு டாப் ஹீரோயினை ஆட வைத்து கல்லா கட்டலாம் என்பது படக்குழுவினரின் திட்டமாக இருக்கிறது.

பாலிவுட் நடிகை: பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என சல்லடை போட்டு சலித்தும் அவர்கள் எதிர்பார்க்கும் ஹீரோயினை கண்டறிய முடியவில்லை. இந்த தேடல் கன்னித்தீவாக நீண்டு கொண்டே செல்ல போனால் போகிறது என்று குண்டூர் காரம் ஸ்ரீலீலாவை அல்லு அர்ஜூனுடன் கோர்த்து விட்டு ஆட வைக்க முடிவெடுத்து இருக்கின்றனர்.

sree leela

sree leela

நடிகை ஸ்ரீலீலா: அல்லு அர்ஜுன் நல்ல டான்சர், ஸ்ரீலீலாவும் குண்டூர் காரத்தில் கலங்கடித்தி இருந்தார். இதனால் தான் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த பாட்டு மட்டும் முடிவுக்கு வந்து விட்டால் படக்குழு நிம்மதி அடைந்து விடும். அதோடு 2வது பார்ட்டில் நாயகனுக்கும், இயக்குனருக்கும் இடையே முட்டி கொண்டதால் இனி அடுத்த பார்ட் எடுக்கிற ஐடியா எல்லாம் இல்லையாம்.

இதையும் படிங்க: Vijay: விஜயின் மாஸ் ஹிட் படத்தை ஜஸ்ட் மிஸ்ஸில் விட்ட சூர்யா… எல்லாம் தம்பியால் வந்த வினை!..

Next Story