40 வருஷமா ஆசைப்பட்டும் அந்த நடிகரோட மட்டும் நடிக்கவே முடியல.. – புலம்பிய நடிகை ரேணுகா..!
கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேணுகா. 60க்கும் அதிகமான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழை விடவும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர். மலையாளத்திலும் கூட நிறைய படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு அறிமுகமாகி வந்த பல நட்சத்திரங்களை வளர்த்துவிட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். அப்படி அவரால் வளர்ந்த நட்சத்திரங்களில் ரேணுகாவும் முக்கியமானவர்.
இவர் பேட்டி ஒன்றில் பேசும்போது தனது ஆரம்பக்கால சினிமா வாழ்க்கை குறித்து அதில் பேசியிருந்தார். நாடகங்களில் முதலில் நடித்து கொண்டிருந்த ரேணுகா சினிமாவிற்கு வாய்ப்பு பெற்று வந்தபோது சினிமா குறித்து பெரிதாக தெரியாமல் இருந்தார். இயக்குனர் பாலச்சந்தரும், டி.ராஜேந்திரும்தான் இவருக்கு நடிப்பதற்கு சொல்லி கொடுத்துள்ளனர்.
அந்த நடிகரோடு நடிக்க முடியவில்லை:
கமல், சூர்யா போன்ற பெரிய நடிகர்களோடு நடித்திருந்தாலும் இப்போதுவரை நடிகர் ரஜினிகாந்தோடு நடிக்கவில்லை என்பது ரேணுகாவிற்கு பெரும் மனக்குறையாக உள்ளது. பேட்டியில் இதுக்குறித்து அவர் கூறும்போது “நான் நாடகங்களில் நடிக்கும்போது அதை பார்த்து ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார்.
அற்புதமாக நடித்துள்ளீர்கள் என கூறி பாராட்டினார். அப்போதில் இருந்தே எனக்கு ரஜினியோடு நடிக்க வேண்டும் என ஆசை. ஆனால் இந்த 40 வருடங்களில் அதற்கான வாய்ப்பே எனக்கு அமையவில்லை என்பது எனக்கு வருத்தம்தான்.
அதே போல விஜய், அஜித் கூடவும் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் ரஜினியோடு ஒருமுறையாவது நடித்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு அந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறேன். என கூறியுள்ளார் ரேணுகா.