Categories: Cinema History Cinema News latest news

ரசிகை அனுப்பிய கடிதத்தால் ஆடிப்போன நடிகை ரேவதி!.. என்னவா இருக்கும்!.

தமிழில் அறிமுகமானவுடனேயே பிரபலமான நடிகைகளில் ரேவதியும் ஒருவர். இயக்குனர் பாரதிராஜா மூலமாக மண் வாசனை திரைப்படத்தில் அறிமுகமானார் ரேவதி. மிகவும் சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் ரேவதி.

ஆனால் அந்த படம் அவருக்கு சிறப்பான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் ரேவதி. நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கை கொடுக்கும் கை திரைப்படத்தில் நடித்தார். அதிக வரவேற்பை பெற்ற ரேவதி கமல்ஹாசனில் துவங்கி கார்த்தி வரை பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Revathi

இப்போதும் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரேவதி. ரேவதி நடித்த படங்களில் மற்றொரு முக்கியமான திரைப்படம் புதுமைப்பெண். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாண்டியன் நடித்தார். இந்த திரைப்படமும் பார்திராஜா இயக்கிய திரைப்படம்தான்.

கதாநாயகனை விடவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படம் புதுமை பெண். எனவே இந்த படம் ரேவதிக்கு முக்கியமான படமாக அமைந்தது. ஒரு புரட்சிக்கரமான பெண்ணாக ரேவதி இதில் நடித்திருப்பார். படம் வெளிவந்த பிறகு ரசிகர்களிடம் இருந்து ரேவதிக்கு நிறைய கடிதங்கள் வந்தன.

அதில் ஒரு கடிதத்தில் பெண் ரசிகை ஒருவர் “இந்த படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. புதுமை பெண் படத்தில் வருவது போலவே நானும் முடிவெடுத்துள்ளேன். என்னை புதுமை பெண்ணாக மாற்றியதற்கு நன்றி” என எழுதியுள்ளார்.

ரேவதி

இதை படித்ததும் ரேவதி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டார். நாம் நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே நாம் மிக சரியாக நடிக்க வேண்டும் என கருதியுள்ளார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அல்லாவுக்கு பதில் அம்மா என்று வசனத்தை மாற்றிய எம்.ஜி.ஆர்… கடுப்பான இயக்குனர்… ஏன் அப்படி செய்தார் தெரியுமா?

Published by
Rajkumar