Connect with us

ரஜினி ரொம்ப மென்மையான மாணவன்…விஜயகாந்த் நல்ல மனிதர்….எனக்குப் பிடிச்ச நடிகர் இவர் தான்…யாரை சொல்கிறார் இந்த பிரபல நடிகை?!

Cinema History

ரஜினி ரொம்ப மென்மையான மாணவன்…விஜயகாந்த் நல்ல மனிதர்….எனக்குப் பிடிச்ச நடிகர் இவர் தான்…யாரை சொல்கிறார் இந்த பிரபல நடிகை?!

80களில் தாய்மார்கள் போற்றும் குடும்பப்பெண்ணாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் இவரது டான்சும் அபாரமாக இருக்கும். சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியைக் கொண்டு கவர்ச்சி சிறிதும் இல்லாமல் எவ்வித ஆபாசமும் இன்றி நடித்து அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றவர்.

இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட் தான். கமல், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து அசத்தினார். இவரது திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத சில நினைவுகளை அவரே பகிர்கிறார்.

ஷோபனா, பானுப்பிரியா, இளவரசி, ஊர்வசி இவர்கள் தான் சக நடிகைகள். 83ல பானுப்பிரியா, இளவரசி, ஊர்வசி நான் 4 பேரும் வந்தோம். போட்டியாளர்கள் கிடையாது. நாங்க எல்லோரும் பிரண்ட்ஸ். அஜீத் சார் பாசமலர்கள்ல எங்க கூட நடிச்சாரு. சின்ன வயசுல இருந்தே தெரியும். இலங்கை சிங்களப்பெண்ணாக நடித்தது புன்னகை மன்னன்.

Revathi

பாலசந்தர் சார் தான் நான் என்ன பண்ணனும்னு என்ன பண்ணக்கூடாதுன்னு எனக்கு கைடா இருந்தாரு. நான் ஒரு கதாபாத்திரம் தான் பண்ணுனேன். அதுக்கு மேல என்னால அப்போது சிந்திக்க முடியல. எனக்கு பொலிட்டிகல் நாலெட்;;ஜ் அந்தளவுக்கு இல்ல. இப்போ பார்த்தா அது வேற ஒரு டைமென்ஷன்.

பாண்டியராஜன் எப்பவுமே சொல்வாரு. கதை சொல்லும்போது அவருக்கு நான் தான் கைகொடுப்பேன்னு சொல்வாரு. என்னைப் பொருத்த வரைக்கும் அவரோட காமெடி சென்ஸ் ரொம்ப பிடிக்கும். அந்த காமெடி சென்ஸ்க்காகவும், ஸ்கிரிப்டுக்காகவும் ஒத்துக்கிட்ட படம் தான் ஆண்பாவம்.

அந்தக் கதாபாத்திரத்துக்காக நான் கைகொடுக்குற மாதிரி ஆனா தூக்கினேன். அவ்ளோதான். எனக்கு ஒரு கேரக்டர் அவ்வளவு தான். அவரு வந்து ரொம்ப அழகா மிக மென்மையா சொல்வாரு.

விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். யுனிட்டுக்கும், அவர் கூட ஒர்க் பண்றவங்களுக்கும் அவரு ரொம்ப அழகா பண்றது சாப்பாடு. இந்த விஷயத்துல அவரோட புரொடக்ஷன்ல எல்லாருக்கும் வயிறு நிறைய சாப்பாடு கொடுப்பாரு. நான் உண்மையிலேயே அதைப் பார்த்திருக்கேன். விஜயகாந்த் புரொடக்ஷன்ல நடிக்கறது ரொம்ப சேஃபா இருக்கும். ரொம்ப நல்லா ட்ரீட் பண்ணுவார்.

கைகொடுக்கும் கைல இருக்குற ரஜினி சார்…இன்னிக்கு இருக்குற ரஜினி சார் ரொம்ப பெரிய வித்தியாசம். ஏன்னா…கைகொடுக்கும் கை படத்துல அவரு வந்து ஒரு மாணவனா மகேந்திரன் சார் படத்துல நடிக்க வந்தாரு.

அவருடைய ரொம்ப ஹிட்டான படம் வந்து முள்ளும் மலரும். அதுவும் மகேந்திரன் சார் டைரக்ஷன்ல நடிச்சதுதான். கைகொடுக்கும் கைல வந்து அவரு மென்மையான ஒரு ஸ்டூடன்ட மாதிரி இருப்பாரு. நான் வந்து ஒரு புதுமுகம்.

kai kodukkum kai rajnikanth, revathi

என்னைப் பொருத்த வரைக்கும் நாங்க பண்ணுனது 2 கேரக்டர். மகேந்திரன் சார் சொன்ன விஷயங்கள நாங்க பண்ணுனோம். அன்னைக்கு வந்து ரஜினிசாருக்கு ஸ்டார்க்கு ஒரு குரோத் இருந்தது. இது 1984னு நினைக்குறேன். அவரு வந்து ரொம்ப ஒரு சாதாரண மனிதனா மகேந்திரன் சாருக்கு பணிஞ்சு போற ஒரு மாணவனா தான் அந்தப்படத்துல இருந்தாரு. ரொம்ப கம்போர்டபிள் ஒர்க்கிங்.

கார்த்திக்கும் நானும் ஒரே ஏஜ் குரூப். நாங்க வந்து ப்ரண்ட்ஸ். நாங்க ஒரு சீன் பண்ணறதா இருந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் படிச்சுப் பார்த்துட்டு அதுல என்னலாம் பெட்டரா பண்ண முடியுமோ அதை டைரக்;டர் கூட டிஸ்கஸ் பண்ணுவோம். அதையே நடித்துக் காட்டுவோம். அது கண்டிப்பா தெரியும்.

அதே சமயத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் கார்த்திக். அவருக்கும் நான் பிடிச்ச ஒரு நடிகை. சேலஞ்சிங்காவும் இருக்கும். அந்த போட்டி வந்து ஸ்க்ரீன்ல தெரியாது. மௌனராகம் படத்த இனிமே ரீமேக் பண்ணவே முடியாது. அந்த பிலிம் வந்து ஒரு மேஜிக். அதை தொடாம இருக்குறதே நல்லது.

mounaragam karthick, revathi

சினிமாவுல வந்து ஹீரோயினோட ஏஜ் வந்து 33. அதுக்கு அப்புறம் ஒரு டவுன் இருக்கும். ஏன்னா நம்ம மெயின் கேரக்டர்ஸாவும் பண்ண முடியாது. மத்த கேரக்டஸ்ல வந்து போடலாமா வேண்டாமாங்கற ஒரு குழப்பம் இருக்கும்.

35ல ருந்து 42 வரைக்கும் ரொம்ப போரிங். அந்த ஏஜ்ல கதாபாத்திரங்கள் எழுதப்படவில்லை. நானும் அந்த டைமில் சங்கடப்பட்டேன். ஏன்டா எதுக்குடா அப்படின்னு ஒரு பீலிங் இருந்தது. மறுபடியும் நானே என்னை தேத்திக்கிட்டு நான் டைரக்ஷன்ல இறங்கின உடனே அது மாற ஆரம்பிச்சுது.

நான் 120 படங்கள் பண்ணிருக்கேன். அதுல எனக்கு பிடிக்காத பிரச்சனையான படங்கள் இருந்ததுன்னா ஏழோ எட்டோ தான். மற்றபடி எல்லா படங்களும் நான் என்ஜாய் பண்ணி பண்ணுனதுதான். இல்லேன்னா இந்த அளவுக்கு வந்து அந்தப் படத்தோட கதைகளோ கதாபாத்திரங்களோ சீன்ஸோ பாடல்களோ இன்னைக்கு வரைக்கும் நின்னுருக்காது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top