முண்டா பனியனில் சும்மா தூக்கலா இருக்கு!.. இளசுகளை ஏங்கவைக்கும் ரித்திகா சிங்!..

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். வட மாநிலத்தை சேர்ந்தவர். சுதாகொங்கரா இறுதிச்சுற்று படத்தை இயக்கியபோது அப்படம் குத்துச்சண்டை தொடர்புடையது என்பதால் அதில் தொடர்பான ஒரு பெண்ணையே நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினார்.
அப்படி அப்படத்திற்குள் வந்தவர்தான் ரித்திகா சிங். அறிமுக நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர். ரித்திகாவின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால் இப்படம் நல்ல வசூலையும் பெற்றது. எனவே, தெலுங்கு, ஹிந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
இது எல்லாவற்றிலும் ரித்திகாவே நடித்தார். அதன்பின் ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். இந்த படமும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா படத்தில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் நூடுல்ஸ் மண்டையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். துல்கர் சல்மான் நடித்த கிங் ஆப் கோத்தா படத்தில் ஒரு கவர்ச்சி பாட்டுக்கு நடனமாடினார். இப்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் கலக்கி வருகிறார்.
ஒருபக்கம், கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பனியன் அணிந்து அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.