இது எப்படி இருக்கு!.. கட்டழகை கச்சிதமாக காட்டிய பாரதி கண்ணம்மா நடிகை....
சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அதிக டி.ஆர்.பியை பெற்றுள்ள சீரியல் பாரதி கண்ணம்மா. அதனால்தான் பல வருடங்களாய் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பலரும் இந்த சீரியலை பார்த்ததற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவா நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன்தான். அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தமாக இவரின் முகமும் நடிப்பும் இருந்தது. எனவே, இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது.
ஆனால், சில மதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி அறிவித்தார், இந்த செய்தியை கேட்ட பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது, ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஒருபக்கம், ரோஷினி ஹரிப்பிரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மாடர்ன் உடையில் மொட்டை மாடியில் உடல் அழகை காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.