
Entertainment News
ரெக்க மட்டும் இருந்தா நீ தேவதை!…வெள்ளை உடையில் மனசை அள்ளும் கண்ணம்மா…
நடிகைகளை விட இப்போது சீரியல் நடிகர்கள் இல்லத்தரசிகளிடம் எளிதில் பிரபலமடைகின்றனர். அதிலும், சில நடிகைகளை மட்டுமே தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு அன்பு செலுத்துவார்கள். அப்படி தாய்மார்களின் அன்பை பெற்றவர்தான் பாரதி கண்ணம்மாவில் நடித்த ரோஷ்னி ஹரிப்பிரியன்.
இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் பலர். ஆனால், திடீரென இந்த சீரியல் இருந்து விலகினார். அதன்பின் அவருக்கு பதில் அந்த வேடத்தில் வேறொரு நடிகை நடித்து வருகிறார்.
மக்களிடம் பிரபலமாகிவிட்டதால் சினிமா வாய்ப்பு தேடி வரும் என கணக்குப்போட்டுத்தான் அந்த சீரியலில் இருந்து ரோஷ்னி விலகினார்.
ஆனால், அப்படி யாரும் அவரை அழைக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
ஒருபக்கம், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற சுடிதாரில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.