More
Categories: Cinema News

சின்ன வயசு பொண்ணுடன் டேட்டிங்!.. வயசுக்கு வந்த மகன்கள் இருக்க அடுத்த திருமணத்துக்கு அலையும் ஹிரித்திக் ரோஷன்?

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிரித்திக் ரோஷன் மீது ஏகப்பட்ட காதல் கதைகள் மற்றும் சர்ச்சைகள் வந்துள்ளன.

சுசானே கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு மகன்களை பெற்ற ஹிரித்திக் ரோஷன் கடந்த 2014ம் ஆண்டே அவரை விவாகரத்து செய்து கழட்டி விட்டார்.

Advertising
Advertising

பின்னர், கங்கனா ரனாவத் உடன் ஹிரித்திக் ரோஷன் டேட்டிங் செய்து வருகிறார் என வதந்திகள் பரவின. மேலும், சில நடிகைகளுடனும் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு தொடர்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.
சில நடிகைகளை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் ஹிரித்திக் ரோஷன் என 2014ம் ஆண்டு முதல் இப்போது வரை ஏகப்பட்ட வதந்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், தில் கபடி படத்தின் மூலம் அறிமுகமான பாலிவுட் நடிகை சபா ஆஸாத் உடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் நடிகர் ஹிரித்தி ரோஷன் உள்ளார் என்றும் அவர்கள் உறவை நடிகையே சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உறுதி செய்து விட்டார் என்றும் ரசிகர்கள் அந்த போஸ்ட்டை குறிப்பிட்டு புதிய காதல் கதைகளை எழுதி வருகின்றனர்.

நடிகையும் பாடகியுமான சபா ஆஸாத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Mon Amou’ என நடிகர் ஹிரித்திக் ரோஷனை கொஞ்சியது தான் இவர்களது உறவு குறித்த தகவல்கள் அம்பலமாக காரணம் என்கின்றனர்.

பிரெஞ்சு மொழியில் ஹிரித்திக் ரோஷனை நடிகை சபா கொஞ்சியதற்கு அர்த்தம் “என் காதலே” என்பதாகும். நடிகை வெளிப்படையாக தனது காதலை அறிவித்து விட்டார் என்றும், நடிகர் ஹிரித்திக் ரோஷன் எப்போ ஓப்பன் பண்ண போகிறார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் நடித்து வரும் அக்ஷய் குமார் மீண்டும் வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் உடன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published by
crdesk

Recent Posts