தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் சச்சு. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தந்து சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். ராணி, தேவதாசு, மாயா பஜார் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்,
பின் பரதநாட்டியத்தின் மேல் கொண்ட ஆர்வத்தினால் தனது சகோதரியுடன் இணைந்து பல மேடைகளில் நடனம் ஆடிகொண்டிருந்தார். ஒரு முறை தனது சகோதரியுடன் நாட்டியம் ஆடும் பொழுது அங்கு சினிமா துறையில் இருந்து பலறும் வந்துள்ளனர். இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் சச்சுவை பார்த்து இங்கு வா என அழைத்துள்ளார்.
இதையும் வாசிங்க:அப்பவே இதை செய்த அஜித்!.. இப்போதான் விஜய்க்கு ஞானம் பொறந்திருக்கா?.. இனிமே வெளியவே வரமாட்டாரா?..
பின் சச்சுவின் சகோதரியையும் அழைத்துள்ளார். இருவரும் வந்து நிற்க சச்சுவின் சகோதரியிடம் மறுநாள் தனது அலுவலகத்திற்கு சச்சுவை சேலை கட்டி அழைத்து வருமாறு கூறியுள்ளார். இவ்வாறு கிடைத்ததுதான் இவருக்கும் முதல் பட வாய்ப்பு.
இவர் வீரத்திருமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஆனந்தன் நடித்திருந்தார். இப்படத்தில் வரும் ரோஜா மகளே ராஜகுமாரி பாடல் இன்று வரை அனைவராலும் ரசிக்கும்படி உள்ளது.
இதையும் வாசிங்க:மகள் இறந்த துக்கத்திலேயே ரத்தம் புரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!.. என்ன பேசினார் தெரியுமா?..
இப்படம் இவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் சற்றும் மனம் தளராத சச்சு நமக்குதான் இன்னும் வயது உள்ளதே. இப்படம் தோல்வி அடைந்தால் என்ன இன்னும் எவ்வளவோ படங்கள் இருக்கின்றன என எண்ணி கொண்டாராம்.
பின் ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சந்தித்த பொழுது உனக்கு இன்னும் சினிமாவில் நடிக்க வயது உள்ளது. அதனால் பொறுமையாய் இரு என கூறியுள்ளார். அவர் கூறிய இந்த வார்த்தையும் இவருக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது என சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் சச்சு கூறியுள்ளார். இப்படத்திற்கு பின் இவர் நடித்த காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், உரிமைக்குரல் போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க:தள்ளிப்போகும் தளபதி 68 ஷூட்டிங்!.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!.. அட போங்கப்பா!..
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…