நான் இப்போ மோசமான நிலைமைல இருக்கேன்! விரட்டுராங்க! கதறி அழுத சதா

Published on: June 7, 2023
sadha
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு சமயம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சதா. மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட சதா தமிழ் தெலுங்கு என மாறி மாறி பல படங்களில் நடித்துக் கொண்டு வந்தார். தமிழில் ஜெயம் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் சதா. அதே படம் முதலில் தெலுங்கில் தான் எடுக்கப்பட்டது .தெலுங்கில் அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த படத்தின் வெற்றி சதாவை தமிழில் ஒரு நிலையான நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுத் தர உதவியது. தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம் ,அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே, எலி போன்ற பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவே மாறினார் சதா.

sadha1
sadha1

அவரின் சினிமா கரியரையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட படமாக அமைந்தது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த டார்ச் லைட். அந்தப் படத்தில் விலை மாதுவாக நடித்திருப்பார் சதா. அதில் சில பல காட்சிகள் பகிரங்கமாகவே காட்டப்பட்டிருக்கும் .அதனாலேயே அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டையும் இழந்தார்.

சினிமாவில் வாய்ப்பு போனாலும் பரவாயில்லை. சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக “earthlings cafe”என்ற ஒரு ஷாப்பை ஆரம்பித்தார். 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த ஷாப் நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது. அதே சமயம் கொரோனா காலகட்டத்திலும் ஒரு வழியாக வருமானத்தையும் அவருக்கு பெற்று தந்தது.

sadha2
sadha2

ஆனா இப்பொழுது அவருக்கு இருக்கும் பிரச்சனை அந்த ஷாப் இருக்கும் இடத்தின் ஓனர் அதை காலி பண்ண சொல்லி வற்புறுத்தி வருகிறாராம். தன் குழந்தையாக அந்த ஷாப்பை நினைத்து வரும் சதா தனது வலைதள பக்கத்தில் இந்த பிரச்சினையை கூறி ரசிகர்களிடம் கதறி அழுதார். மேலும் அந்த ஓனரிடம் எவ்வளவு சொல்லியும் அவர் மனதை மாற்ற முடியவில்லையாம்.அதனால் அந்த இடத்தை விட்டு காலி செய்வதாக கூறி இருக்கிறார் சதா.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.