நடிகை சாய்பல்லவி தான் எதற்காக எப்போதும் புடவை அணிகிறேன் என்ற ரகசியத்தை கூறியுள்ளார்.
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. அறிமுகமான முதல் திரைபடத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். அந்த படத்தில் சிம்பிளான இவரது தோற்றம் தான் பலருக்கும் பிடித்துப்போனது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல ஹீரோயினாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது கார்கி என்கிற திரைப்படதில் சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

இப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இதன் ப்ரோமோஷன் விழாவில் கலந்துக்கொண்ட சாய்பல்லவி எப்போதும் தான் ஏன் புடவை அணிகிறேன் என்ற ரகசியத்தை கூறியிருக்கிறார். நான் கல்லூரில் நடனம் ஆடியபோது அந்த நடனத்திற்கு ஏற்ப கொஞ்சம் ஓப்பன் வைத்த உடை அணிந்தேன்.
இதையும் படியுங்கள்: பொன்னியின் செல்வனில் இதனை எதிர்பார்க்காதீங்க… ஏமாந்து போய்விடுவீங்க…எச்சரிக்கும் படம் பார்த்த குரூப்..

அந்த வீடியோவை ப்ரேமம் படம் வந்த பிறகு பலரும் ஷேர் செய்து விமர்சித்தனர். அன்றிலிருந்தே நான் புடவை அணிவதே சவுகரியமாக உணர்ந்து எப்போதும் அதையே அணிகிறேன். ஆனால், வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு எந்த உடையும் அணியும் சுதந்திரத்தை கொடுப்பேன் என கூறினார்.





