சினிமாவுக்கு முழுக்கு போடும் சாய் பல்லவி?...என்ன காரணம் தெரியுமா?....
ஊட்டியை சேர்ந்தவர் சாய் பல்லவி. இவர் ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ் படித்தவர். ஆனால், பிரேமம் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இப்படம் மாபெரும் ஹிட் அடிக்கவே முழு நேர நடிகையாகும் நிலை ஏற்பட்டது.
தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் இவர் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். நன்றாக நடனமும் ஆடத்தெரிந்தவர். எனவே, இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறது.
ஆனால், தான் படிப்புக்கேற்ற மருத்துவர் வேலையை செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம் அவருக்கு பல வருடங்களாக இருந்துள்ளது. தற்போது அதிகமாகவே நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர மருத்துவராக பணியாற்ற அவர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: “சந்தானம் சார், காமெடி எங்க சார்?”… ஏஜென்ட் கண்ணாயிரம்… சிறு விமர்சனம்
இதற்காக கோவையில் ஒரு புதிய மருத்துவமனையை அவர் கட்டி வருவதாகவும், அதை அவரின் தங்கை நிர்வகிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சாய் பல்லவி சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.