More
Categories: Entertainment News

ப்பா… டூ பீஸ் ட்ரெஸ்ஸில அந்த கடற்கரையே சூடாகுது… இளசுகளுக்கு பர்த்டே ட்ரீட் வைத்த சாக்ஷி அகர்வால்…!

நடிகை சாக்ஷி அகர்வால் டூ பீஸ் உடையில் ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.

படித்து முடித்துவிட்டு ஒரு நல்ல ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர் சாக்ஷி அகர்வால். மாதம் 2.5 லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த இவர் மாடலிங் மீதி இருந்த ஆர்வம் காரணமாக சில விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினர்.

சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து இவர் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து காலா திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார். பின்னர் விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருப்பார்.

இப்படி சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

அந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்த இவர் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

சமூக வலைதள பக்கங்கள் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் சாக்ஷி அகர்வால். அதிலும் இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்களுக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.

இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் பாலோவர்களை வைத்திருக்கின்றார். வெளிநாட்டில் தன்னுடைய 34-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சாக்ஷி அகர்வால் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கின்றார்.

Published by
ramya suresh

Recent Posts