‘விஜயசாந்தி’யா மாறிட்டீங்கனா எங்க நிலைமை என்ன ஆகுறது?.. சாக்‌ஷி கொடுத்த அப்டேட்டால் பரிதவிக்கும் ரசிகர்கள்..

Published on: December 2, 2022
sakshi_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறி வருகிறார் நடிகை சாக்‌ஷி அகர்வால். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து பின் மக்கள் மத்தியில் இடம் பெற விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

sakshi1_cine
sakshi agarwal

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சாக்‌ஷியை அனைவரும் அறிய தொடங்கினர். ஏற்கெனவே கபாலி, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த சாக்‌ஷி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்க கமிட் ஆனார். அதன் பின் கொரானா காலத்தில் அந்த படங்கள் எல்லாம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இதையும் படிங்க :பாலுமகேந்திராவிடம் உதவி கேட்டு வந்த இயக்குனர்!.. ‘அந்த மாதிரி’ படம் எடுக்க சொல்லி டார்ச்சர் செய்த சம்பவம்..

இதனால் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை காட்டி ரசிகர்களை ஈர்த்து வந்தார். அவருக்கு இன்ஸ்டாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். கவர்ச்சியின் உச்சிக்கே சென்று அந்த அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sakshi2_cine
sakshi agarwal

மேலும் தன்னுடைய உடம்பை கட்டுக் கோப்பாக வைக்கவும் உடற்பயிற்சி செய்து வருகிறார். அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கைவசம் நிறைய படங்களை வைத்துக் கொண்டுவரும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் சாக்‌ஷி.

பஹீரா, நான் கடவுள் இல்லை, கெஸ்ட் சாப்டர் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறாராம் சாக்‌ஷி. மேலும் கந்தர்வக்கோட்டை படத்தின் இயக்குனர் சக்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இவரின் அனைத்து படங்களுமே திரில்லரை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட படங்களாக இருக்கின்றனராம்.

sakshi3_cine
sakshi agarwal

மேலும் இவரின் ஜிம்பாடி உடம்பை பார்த்து இரண்டு படங்களில் சண்டைக் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம் சாக்‌ஷி. அப்போ அடுத்த விஜயசாந்தியாக எதிர்பார்க்கலாமா என்று தொகுப்பாளர் கேட்க கண்டிப்பாக என பதிலளித்துள்ளார் சாக்‌ஷி. மேலும் எனக்கு என்ன மாதிரியான டிராக் வருகிறதோ அதை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். கவர்ச்சிக் கன்னியாகவே பார்த்த ரசிகர்களுக்கு சாக்‌ஷியின் இந்த பதில் கொஞ்சம் ஏமாற்றத்தை தான் தரும்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.