சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆச்சி.. போட்டோ போட்டு பீலிங் காட்டிய சமந்தா....

by சிவா |   ( Updated:2022-02-26 00:37:02  )
சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆச்சி.. போட்டோ போட்டு பீலிங் காட்டிய சமந்தா....
X

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சமந்தா மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அடுத்த படமாக நடிகர் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

mascow

அதன்பின் மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் வந்தது. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் ஆந்திரா பக்கம் சென்றார். விஜயுடன் தெறி, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். விஷாலுடன் இரும்புத்திரை, தனுஷுடன் தங்க மகன் என சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: நீ ஆடும்போது அது மட்டும் தனியா ஆடுது!…ஷிவானி போட்ட செம குத்து (வீடியோ)…

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிந்துவிட்டார். தற்போது திரைப்படங்களில் நடிப்பது, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார்.

samantha

அவர் சினிமாவுக்கு 12 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்ஸ்டாகிராமில் ‘இன்று காலை நான் விழித்தேன், நான் திரைப்படத் துறையில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ளேன் என்பதை உணர்ந்தேன். லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் மற்றும் ஒப்பற்ற தருணங்களைச் சுற்றி வரும் 12 வருட நினைவுகள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பயணம் மற்றும் உலகின் சிறந்த, மிகவும் விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்! சினிமாவுடனான எனது காதல் கதை ஒருபோதும் முடிவடையாது’ என உருகியுள்ளார்.

Next Story