வீராங்கனைக்காக குரல் கொடுக்கும் சமந்தா எங்க? அற்ப சந்தோஷத்தை தேடும் நாகு எங்க? இவங்க சொல்றத கேளுங்க

by Rohini |
samnatha
X

samnatha

தென்னிந்திய சினிமாவிலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது பல படங்களில் நடித்து வரும் சமந்தா ரசிகர்களின் கொள்ளை கொண்ட நடிகையாக இருந்து வருகிறார். திருமணம் , விவாகரத்துக்கு பிறகு சமந்தாவின் வாழ்க்கை போர்க்களமாக மாறியது. அந்த நேரத்தில் கெத்தா ஒரு முடிவை எடுத்து மீண்டு வந்தார் சமந்தா. எந்தவொரு முன்னணி நடிகையும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார்.

புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதன் பிறகு தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜாவாக நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். இந்த நிலையில் நேற்று நாகசைதன்யாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை சோபிதாவை திருமணம் செய்ய இருக்கிறார் நாக சைதன்யா. தெலுங்கு உலகில் கொடி கட்டி பறக்கும் குடும்பம் நாகர்ஜூனாவின் குடும்பம்.

ஒரு பக்கம் சமந்தாவை வெறுப்பேற்றவே நேற்று இந்த நிச்சயதார்த்தத்தை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஏனெனில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சமந்தா நாக சைதன்யாவிற்கு ப்ரோபோஸ் செய்தாராம். அதனால்தான் அந்த தேதியில் நிச்சயதார்த்தத்தை வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் சில தகவல்களை பகிர்ந்தார்.

நாக சைதன்யா சமந்தாவை வெறுப்பேற்றவே செய்திருந்தாலும் அவருக்குத்தான் இறங்குமுகம். இந்த பக்கம் சமந்தாதான் கெத்து காட்டி வருகிறார். இன்று சமந்தாவின் மார்கெட் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். நாக சைதன்யா அவரது அப்பாவின் வழியைத்தான் பின்பற்றுகிறார். நாகர்ஜூனாவும் இரண்டாவது திருமணம். பெண்கள் விஷயத்திலும் ஒரு மாதிரி. அதே போல்தான் நாகசைதன்யாவும் என சபிதா கூறினார்.

மேலும் இந்த இரண்டாவது திருமணமும் காதல் என்று சொல்கிறார்கள். ஆனால் அதில் காமம்தான் இருக்கிறது. நிச்சயதார்த்தம் நடந்த அதே நாளில் சமந்தா என்ன செய்தார் என பார்த்தீர்களா? சமூக அக்கறையுடன் குரல் கொடுத்தார் .ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்திற்காக குரல் கொடுத்தார். அந்தளவுக்கு சமுதாயத்தில் சமந்தாவுக்கு என ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் நாக சைதன்யாவுக்கு எந்தவொரு பேரும் இல்லை.

உண்மையிலேயே படத்தில் அப்படி நடிக்க கூடாது.இப்படி நடிக்கக் கூடாது என்றெல்லாம் சமந்தாவிடம் நாகர்ஜூனா குடும்பம் கண்டீசன் போடவில்லை. அதனால்தான் பிரச்சினையே வந்தது என்று கூறினார்கள். ஆனால் உண்மையிலேயே நாகசைதன்யா பல பெண்களிடம் டேட்டிங் வைத்ததாகவும் அதனால்தான் சமந்தா நாகசைதன்யாவை விட்டு விலகினார் என்றும் சபிதா கூறினார்.

Next Story