பிரபல பாலிவுட் நடிகருடன் கிசுகிசுக்கப்படும் சமந்தா.. உண்மையா இருந்தா ஹேப்பி
திரை உலகில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. தமிழில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா அதற்கு முன்பே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் துணை நடிகையாக நடித்தார். ஆரம்பத்தில் அவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் தொடர்ந்து இந்த சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அடைய வேண்டும் என முயற்சித்து வந்தார்.
அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து விஜயின் லக்கி ஹீரோயின் ஆக மாறினார் சமந்தா. தெறி, மெர்சல் ,கத்தி என அவர் விஜயுடன் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது .ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சமந்தா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார் .பல விருதுகளை வென்றுள்ள சமந்தா 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் .
இதையும் படிங்க: அண்ணன் தம்பி 2 பேருக்கும் ஒரே மேடையில் கல்யாணமா?.. நாகார்ஜுனா கொடுத்த விளக்கம்!..
ஆனால் இருவருக்கும் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள். இருவருக்கும் என்ன பிரச்சனை என இதுவரை தெரியாத போதிலும் ஊடகங்களில் அவ்வப்போது சமந்தா கூறும் சில செய்திகள் ஒரு வேளை நாக சைதன்யாவுடன் இதுதான் பிரச்சினையாக இருக்குமோ என ரசிகர்களை யோசிக்க வைக்கிறது.
இந்த நிலையில் திடீரென சமந்தாவை பிரபல பாலிவுட் நடிகருடன் சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அவர் வேறு யாருமில்லை போனி காபூரின் மூத்த மனைவியின் மகனான நடிகர் அர்ஜுன் கபூர். இவரும் இப்போது சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர் ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.
இதையும் படிங்க: நயன்தாரா, தனுஷ் பிரச்சனைக்கு முக்கிய காரணமே அவர் தானா? யாரைச் சொல்றாரு பிரபலம்?
இப்போது அவருடனான ரிலேஷன்ஷிப்பை பிரேக் செய்து சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் அர்ஜுன் கபூர். இவருடன் தான் இப்போது சமந்தாவை தொடர்பு படுத்தி பேசி வருகிறார்கள். இருந்தாலும் இதை அறிந்த ரசிகர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.