ஐயோ இப்படி காட்டினா ஹார்ட் பீட்டு எகிறுமே!... தூக்கத்தை கெடுக்கும் நடிகை சமந்தா...
திரையுலகில் பல நடிகைகள் இருந்தாலும் எல்லா நடிகைகளும் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாவதில்லை. சில நடிகைகள் மட்டுமே நடிப்பு, கவர்ச்சி என அனைத்தையும் காட்டி முன்னணி இடத்திற்கு வருவார்கள். அப்படி ஒருவர்தான் நடிகை சமந்தா.
இவர் நடித்தது குறைவான படங்கள்தான். ஆனால், முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்துதான் சினிமா உலகிலும், ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வரும் சமந்தா சமீபத்தில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சகுந்தலாவாக அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.