குழந்தை பெத்துக்கணும்.. சீக்கிரம் படத்தை முடிங்க! இப்படியெல்லாம் இருந்த சமந்தாவை என்ன பண்ணாங்க?
Actress Samantha: தென்னிந்திய சினிமா உலகில் சமந்தா ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு மாடலாக இருந்த சமந்தா ஒரு படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் படத்தின் இயக்குனர் சமந்தாவின் ஸ்கின் டோன் சரியில்லை என்று சமந்தாவை நிராகரித்துவிட்டாராம். இருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சித்துக் கொண்டே இருந்தார் சமந்தா.
அவரின் இந்த போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கெரியர் பக்கம் நல்ல முறையில் செட்டிலானாலும் மனதளவில் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். திடீரென மையோசிட்டிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சை முறைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்.
இப்படி நாள்தோறும் இந்த நோய்க்கு எதிராக போராடிக் கொண்டு வருகிறார் சமந்தா. ஆனால் பொதுவெளியில் அவரை பார்க்கும் போது அதே புன்னகையுடன் காணப்படுகிறார். 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதிலிருந்து சமந்தா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சொல்லப்போனால் அவருடைய விவாகரத்துக்கு பிறகுதான் சமந்தாவின் கெரியரே உயர்ந்தது என்று சொல்லலாம்.
கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் நீலிமா குணா சமந்தாவை பற்றி ஒரு பேட்டியில் கூறிய செய்தி இணையத்தில் வைரலானது. அதில் நீலிமா குணா, சமந்தாவின் விவாகரத்துக்கு பிறகு இந்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது சமந்தா சீக்கிரம் குழந்தையை பெற்றுக் கொள்ளப் போவதாகவும் வாழ்க்கையை தொடங்கப் போகிறேன் என்று சமந்தா கூறியதாகவும் நீலிமா குணா தெரிவித்தார். நீலிமா குணாவும் அவரது தந்தையும் சாகுந்தலம் படத்திற்காக சமந்தாவை அணுகியபோது சமந்தா ஒரு கண்டீசன் போட்டாராம். அதாவது 2021 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என்றும் நான் வாழ்க்கையை தொடங்கி தாயாக விரும்புகிறேன் என்றும் தெரிவித்தாராம்.
அந்த நேரத்தில் குழந்தை பெறுவதுதான் சமந்தாவின் முதல் முன்னுரிமையாக இருந்ததாம். மேலும் சாகுந்தலம் படம் தன்னுடைய கடைசி படமாக கூட இருக்கலாம். அதன் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு குழந்தைகளை பெற்று வாழ்க்கையை வாழப் போவதாக சமந்தா கூறியிருந்தாராம். ஆனால் அதற்குள் சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் என்னதான் பிரச்சினை ஏற்பட்டது என்றே தெரியவில்லை, அவர் கண்ட கனவெல்லாம் சுக்கு நூறாக பொசுங்கி போனது.