
Cinema News
படமோ தோல்வி!.. ஆனால் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிக் கொடுத்த தனுஷ் பட நடிகை..
தமிழ் சினிமாவில் நடிகைகளை விட நடிகர்களுக்கு தான் மவுசும் அதிகம், சம்பளமும் அதிகம். அது அந்தக் காலத்தில் இருந்தே பின்பற்றப் படும் வழக்கமாகவே இருக்கின்றது. அதை மாற்றும் விதமாகத்தான் சமீபகாலமாக ஹீரோயின் சென்ரிக் படமாக நடிகைகள் கதைகளை தேர்வு செய்து வருகின்றனர்.
சம்பளப் பிரச்சினையில் கறார் காட்டும் நடிகர்களும் இருக்கிறார்கள் அதே நேரத்தில் நடிகைகளும் இருக்கின்றனர். இன்னும் கூடுதலாக சம்பளப்பாக்கி இருந்தால் ஆடியோ லாஞ்சிற்கு வரமாட்டேன் என்றும் டப்பிங் பேசமாட்டேன் என்றும் அடம்பிடிக்கும் நடிகர், நடிகைகள் இருக்கின்றனர்.

sam1
இந்த நிலையில் நடிகை சம்யுக்தா இதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கிறார். தமிழில் களறி, ஜூலைக் காற்றில் போன்ற படங்களில் நடித்து விட்டு வாய்ப்புகள் வராததால் மலையாள சினிமாவை நோக்கி பயணப்பட்டார். இப்போது மலையாளத்தில் முன்னனி நடிகையாக வலம் வரும் சம்யுக்தா சமீபத்தில் ரிலீஸான ‘வாத்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அந்தப் படம் உலகளவில் 75 கோடி வரை வசூலைப் பெற்றுள்ள நிலையிலும் தமிழை விட தெலுங்கில் தான் வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சம்யுக்தாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

sam2
இந்த நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சம்யுக்தாவை பற்றி கூறும் போது ஒரு படத்திற்காக 65% மட்டுமே சம்பளமாக கொடுத்தாராம் அந்த தயாரிப்பாளர். ஆனால் அந்தப் படமோ அட்டர் ப்ளாப்பாம். இருந்தாலும் அவருக்கு கொடுக்க வேண்டிய மீதி தொகையை அந்த தயாரிப்பாளர் கொடுக்க சென்றிருக்கிறார். ஆனால் சம்யுக்தா படம் தோல்வியை கருதி எனக்கு சம்பளம் இதுவே போதும், அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டாராம்.