என்கிட்ட சொன்ன கதை வேற எடுத்த கதை வேற... இப்படி பண்ணிட்டாங்களே...கதறும் சிம்பு பட நடிகை....!

by ராம் சுதன் |   ( Updated:2022-05-25 13:19:17  )
simbu with nayanthara
X

குழந்தையில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் என்றால் அது சிம்பு தான். இவரது கெரியரில் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் தற்போது வரை பெயர் சொல்லும் ஒரு படம் என்றால் அது வல்லவன் தான்.

பள்ளி மற்றும் கல்லூரி பருவம் என இரண்டு மாறுபட்ட கேரக்டரில் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா, ரீமாசென், சந்தியா என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர்.

vallavan movie

இந்நிலையில் வல்லவன் படம் குறித்து காதல் சந்தியா சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி வல்லவன் படத்தில் சிம்புவின் தோழியாக நடித்த சந்தியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, "வல்லவன் படத்திற்காக என்னிடம் சொன்ன கதை ஒன்று. ஆனால் படத்தை பார்த்தபோது அந்த கதை வேறு.

என்னிடம் அவர்கள் சொன்ன கதையை உங்களிடம் சொன்னால் வேறு ஒரு திரைப்படம் என எண்ணுவீர்கள். மொத்தமாக படத்தின் கதையே மாறிவிட்டது" என கூறியுள்ளார்.

vallavan movie

சந்தியா கூறியபடி கதை மாறியே இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் படம் வெற்றி பெற்றதல்லவா அது தான் முக்கியம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Next Story