ஊருக்குத்தான் உத்தமன்! திருமணத்திற்கு பிறகு பட்ட வேதனைகளை பகிர்ந்த சங்கீதா
Actress Sangeetha: தமிழ் சினிமாவில் 90 கள் காலகட்டத்தில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. சென்னையில் பிறந்த சங்கீதா ஒரு அற்புதமான பரதநாட்டிய கலைஞர். இவர் நடிக்க வந்த புதிதில் குறைந்த பட்ஜெட் உள்ள திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பிதாமகன்.
அந்தப் படம் தேசிய விருதும் பெற்றது. அதில் சங்கீதாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்திலும் நடித்தார். சினிமா மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தி வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார் சங்கீதா.
இதையும் படிங்க: தங்கலான்லாம் ஓரமா போ!. அடிச்சி தூக்கும் டிமாண்டி காலணி 2… அருள்நிதி செம ஹேப்பி!…
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு இவர் பிரபல பின்னணி பாடகர் ஆன கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது கணவர் கிரிஷை பற்றி சமீபத்தில் பேட்டியில் சங்கீதா கூறி இருப்பது பெரும் வைரலாகி வருகின்றது.
ஒரு விருது வழங்கும் மேடையில் தான் கிரிஷை முதன் முதலில் சந்தித்தாராம் சங்கீதா. அப்போது சிறந்த பின்னணி பாடகர் என்ற விருதை கிரிஷுக்கு வழங்கியதே சங்கீதாதானாம். அப்போது கிரிஷை பார்க்கும் பொழுது மிக அழகாக இருக்கிறார் என இவருக்கு ஆரம்பத்திலேயே மனதில் தோன்றி இருக்கிறது. அந்த நேரம் சங்கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் அவரது வீட்டில் நடந்து கொண்டிருந்ததாம்.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியராஜை பழிவாங்கிய சிவாஜி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா?!…
கிரிஷை பார்த்தவுடன் அவரது வீட்டில் போய் இந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் என சொல்லி இருக்கிறார். அதற்கு அவருடைய வீட்டார் பார்க்க மிக சின்ன பையனா இருக்கிறானே எனக் கூறி இருக்கிறார்கள். அதன் பிறகு கிரிஷை பார்த்து முதன் முதலில் சங்கீதா கேட்ட கேள்வி உங்களுக்கு வயது என்ன என்பது தானாம்.
அப்போது கிரிஷுக்கு வயது 30. சங்கீதாவுக்கு 28 .ஆனால் இன்றுவரை மக்கள் இருவரையும் பார்க்கும் பொழுது சங்கீதா தான் கிரிஷைவிட வயது மூப்பு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. என்னை விட அவர் இரண்டு வயது மூத்தவர் என இந்த பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார் சங்கீதா.
இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
திருமணம் ஆகி முதல் ஒரு வருடம் எங்களுக்குள் நிறைய சண்டைகள் வந்தது என்றும் சினிமா பற்றியே அவருக்கு அந்த நேரம் எதுவும் தெரியாது. அப்பொழுதுதான் அவர் சினிமாவிற்குள் எண்டிரியான நேரம். அதனால் அதை வைத்து எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது என்றும் கூறியிருக்கிறார் சங்கீதா. மேலும் ஊருக்கு நல்லவராக இருப்பார். வீட்டில் ரொம்ப ஸ்டிரிட் எனக் கூறியிருக்கிறார் சங்கீதா.