நான்தான் ஹீரோயின் என்றதும் ராஜ்கிரண் சார் போட்ட முதல் கண்டிசன் – சங்கீதா பகிர்ந்த் ந்த சம்பவம்

Published on: May 2, 2026
sangeetha
---Advertisement---

எல்லாமே என் ராசாதான் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சங்கீதா. முதல் படமே அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து விஜயுடன் பூவே உனக்காக, விஜயகாந்துடன் அலெக்சாண்டர், பிரபுவுடன் சீதனம், பார்த்திபனுடன் புள்ளகுட்டிகாரன் என சத்தமில்லாமல் பல வெற்றிகளை கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கி, மலையாளம் மொழி படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும்போதே இயக்குஅன்ர் சரவணனை காதலித்து திருமணம்செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலையிருந்த சங்கீதா நீண்ட காலத்திற்கு பிறகு பரத் நடித்த காளிதாஸ் 2 மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்தார்.

இந்த நிலையில் நடிகை சங்கீதா தன் முதல் பட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் கூறியபோது, எல்லாமே என் ராசாதான் படத்துல நான் நடிக்கும்போது அப்போதுதான் பத்தாவது முடிச்சிருந்தேன். அந்த படத்தில் நான் தான் ஹீரோயின் என முடிவானதும் ராஜ்கிரண் சார் போட்ட முதல் கண்டிஷன் நான் வெயிட் போடணும் என்பதுதான். அத்தனை வருஷமா வீட்ல சொல்லி சாப்பிடாதவள் ராஜ்கிரண் சாருக்கு பயந்து சாப்பிட்டேன். எனக்குன்னு டயட் பிளான் எல்லாம் கொடுத்து தினம் முட்டை, ஐஸ்கிரீம், மலைப்பழம் என சாப்பிட்டேன். சாப்பாடு கேரியரில் வரும் ஆனால் சாப்பிட முடியாமல் அழுவேன் என்று சங்கீதா அந்த சம்பவத்தை பகிர்ந்திருந்தார்.