கண்டபடி திட்டுவாரு.. கழுவி ஊத்துவாரு!.. அவர் இல்லனா நான் இல்ல!.. யாரைச் சொல்கிறார் சரிதா?..
தமிழ்த்திரை உலகில் 80களில் சிவப்பா இருந்தால் தான் கதாநாயகி என்று இருந்த ஒரு காலட்டத்தில் சரிதா இறங்கி அதகளப்படுத்தினார்.நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய அபார நடிகை. 1960ல் குண்டூர் அருகில் சாதாரண கிராமத்தில் பிறந்த பெண். பேரு அபிலஷா.
15 வயசிலேயே சினிமாவில் அறிமுகமாகிறார். முதல் ஹீரோவே கமல். மரோசரித்ரா படம். கே.பாலசந்தர் டைரக்டர். தன் கதைக்கேற்ப கருப்பு கதாநாயகியைத் தேடிக்கொண்டு இருந்தார் பாலசந்தர். அதிலும் குள்ளமா பெரிய கண்களுடன் உள்ள கதாநாயகியைத் தேடிய போது தான் சரிதா கிடைத்தார்.
எப்படின்னா ஒரு கல்யாண வீட்டோட ஆல்பத்தைப் புரட்டிய போது சரிதாவோட படத்தைப் பார்த்துட்டு நடிக்க வரீயான்னு பாலசந்தர் கேட்டுள்ளார். அதற்குத் தயாராக இருந்த சரிதா நடிக்க ஆரம்பித்தார். அதுதான் மரோசரித்ரா. தெலுங்கு படம்.
அது ஒரு மாபெரும் வெற்றிப்படம். இந்தியில் ஏக் துஜே கேலியே என்ற பெயரில் வெளியானது. அந்த நேரத்தில் சரிதாவும் பல படங்களில் பிசியாகி பரபரப்பாகி விடுகிறார். 16வது வயதில் வெங்கடசுப்பையா என்ற தெலுங்கு நடிகரை மணமுடிக்கிறார். 7 மாதங்கள் வரையே நீடித்த திருமணத்தில் மனக்கசப்பு வந்து விவாகரத்து ஆகிறது.
அடுத்த படம் ரஜினியுடன் தப்புத்தாளங்கள். சூப்பர் ஹிட். அப்போது சரிதா தென்னிந்தியா முழுவதும் பிசியான நடிகையானார். ரஜினி, கமல், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கன்னடத்துல ராஜ்குமார், மலையாளத்துல முகேஷ், மோகன்லால், மம்முட்டி என பிசியானார். நல்ல நல்ல கதைகளாக அவருக்கு வந்து சேர்ந்தது.
நான் களிமண்ணாக இருந்தேன். என்னை நல்ல நடிகையாக மாற்றியவர் கே.பாலசந்தர். எனக்கு ஒண்ணுமே தெரியாது. லெப்ட், ரைட்னு சொல்வாரு. நடந்து வான்னு சொல்வாரு. எனக்கே எரிச்சலா இருக்கும். அறிவு கெட்ட முண்டம்னு என்னை அடிக்கடித் திட்டுவாரு. அதைத் தைரியமா நான் எந்த ஸ்டேஜ்லனாலும் சொல்லுவேன்.
அது எனக்குக் கொடுத்த பெரிய பட்டம். அவரு திட்டலேன்னா நான் இந்த அளவுக்கு வளர்ந்துருக்கவே முடியாது. எங்கிட்ட இருந்து நடிப்பை வெளியே கொண்டு வந்துருக்க முடியாது. அவரோட இயக்கத்துல தான் அதிக படங்கள் பண்ணுனேன். குறிப்பா தண்ணீர் தண்ணீர் படம். பாலசந்தர் எடுத்த இது பிரமாதமான படம். ஒரு ஷாட் எடுக்கும்போது எப்படி சரிதா கிட்ட வேலை வாங்கப் போறேன்னு நினைச்சாராம் பாலசந்தர்.
இடுப்புல ஒரு குடம். தலையில ஒரு குடம். இன்னொரு கையில குழந்தை. 5 கிலோ மீட்டர் தூரம் பொட்டல்காடுல நடக்க வச்சி ஷாட் எடுத்தேன். படத்துலயே பெரிய ஹைலைட். அதே போல தான் அச்சமில்லை அச்சமில்லை. ஒரு கணவனோட நம்பகமான பேச்சை நம்பி கிராமத்தில் இருந்து டவுனுக்கு வந்து பொழைக்க வர்றாங்க.
கணவன் அரசியலுக்குள் போகிறான். அங்கு போனதும் அவனது குணநலன்கள் மாறுது. அதை ஆரம்பத்தில் சரிதா எச்சரிக்கிறாள். ஆனால் கணவன் கேட்கவில்லை. கடைசியில் ஒரு முடிவு நடக்கிறது. அங்கு தான் சரிதா நடிப்பில் பின்னிப் பெடல் எடுக்கிறாள்.