இவர்களுக்கெல்லாம் டப்பிங் பேசியது இந்த பிரபல நடிகையா?.. 80களில் ஹோம்லியாக நடித்து உச்சம் பெற்ற நடிகை!..
கே.பாலசந்தரின் அறிமுகம் என்றால் சொல்லவா வேண்டும். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ் உட்பட பல முக்கியமான நடிகர்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை பாலசந்தரையே சேரும். அவரின் அறிமுகம் செய்து வைத்ததில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சரிதா.
பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், எதார்த்தமான நடிப்பு, என அனைவரையும் மிரள வைத்தவர் சரிதா. முதலில் தெலுங்கு படத்தில் தான் பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 இல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
சரிதா பாலச்சந்தரின் முக்கியமான கதாநாயகிகளில் ஒருவர். 22 படங்களில் பாலச்சந்தர் இவரை நடிக்கச் செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பாலச்சந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.
இப்படி நடிப்பில் பல சாதனைகளை செய்த சரிதா சிறந்த டப்பிங் நடிகையாகவும் திகழ்ந்தார். பல வெற்றிப் படங்களுக்கு பிரபல நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார் சரிதா. படம் பார்க்கும் போது இது சரிதா குரல் என்று யாராலும் கண்டறிய முடியாது.
இவையெல்லாம் சரிதாவின் குரலா? என்று வியக்கின்ற அளவுக்கு பேசியிருக்கிறார். அந்த வகையில் பாட்ஷா படத்தில் நக்மாவிற்கு டப்பிங் பேசியிருக்கிறார். ரட்சகன் படத்தில் சுஸ்மிதா சென்னுக்கு டப்பிங் பேசியது சரிதா தான்.
இதையும் படிங்க : சம்பளமே வாங்காமல் இசையமைத்த இளையராஜா!.. அட இப்படியெல்லாம் நடந்திருக்கா!…
ஒரு அம்மன் படத்தில் விஜயசாந்திற்கு டப்பிங் பேசியதும் சரிதா தான். அதே போல் வள்ளி படத்தில் பிரியா ராமனுக்கும் டப்பிங் பேசியதும் சரிதா தான்.இப்படி ஏராளமான நடிகைகளுக்கு தனது குரல் மூலம் வசனங்களை வெளிப்படுத்தி வரும் சரிதா சின்னத்திரையிலும் ஜொலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.