சரிதாவுக்கு நாலு புருஷன்!. அடுத்த பட வாய்ப்புக்கு அடிபோடுறார்.. கோபத்தில் வெடித்த பயில்வான் ரங்கநாதன்

Published on: July 29, 2023
saritha
---Advertisement---

சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பேசிய நடிகை சரிதா, சிவ கார்த்திகேயனின் நடிப்பை, அவரது மேனரிசத்தை பார்க்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே இருந்தார் என்று பேசியிருந்தார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் அப்படி பேசியது எனக்கு தெரியாது. நீங்கள் சொல்லி தான் கேள்விபடுகிறேன். ஆனால் இதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மிகவும் கோவமாக தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனும் ரஜினியை போல எளிமையானவர். ஆனால் அதற்காக சிவகார்த்திகேயன் ரஜினி எல்லாம் கிடையாது. நடிகை சரிதா அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக ஓவராக ஐஸ் வைக்கிறார்.

saritha

ஆனால் இது உண்மையில்லை என்பது அவருக்கே தெரியும். யாராவது சிவகார்த்திகேயனையும், ரஜினிகாந்த்தையும் ஒப்பிடுவார்களா. இதெல்லாம் ரொம்ப தவறு. அவரின் வயதிற்கும், அனுபவத்திற்கும் முன்னாள் சிவகார்த்திகேயன் ஒன்றுமே இல்லை. சரிதாவுக்கு மொத்தம் 4 கணவர்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சரிதா வெங்கட் ராஜு என்ற நபரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டர்.

அதன் பின்னர் தான் நடிக்க வந்தார். பின்னர் நடிகர் தியாகராஜனை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது பிரசாந்த்துக்கே 10 வயது ஆக இருந்தது. இதனால் தியாகராஜன் திருமணம் செய்ய யோசித்தார். அதன் பிறகு மலையாள நடிகர் முகேஷும் சரிதாவும் காதலித்து வந்தனர். அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். குழந்தையும் பிறந்தது. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

sarithaa

சிவகார்த்திகேயன் நடிப்பு, ஸ்டைல், பாடி லாங்குவேஜ் எல்லாமே வேற. ரஜினி போல் எல்லாம் இல்லை. சரிதா இப்படி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த கிசுகிசுவிலும் சிக்காமல், கடினமாக உழைத்து முன்னேறியவர் சிவகார்த்திகேயன். அவரை பற்றி இப்படியெல்லாம் பேச கூடாது. சிவகார்த்திகேயனின் பாணி வேறு, ரஜினிகாந்த்தின் பாணி வேறு. இரண்டையும் ஒப்பிடவே கூடாது என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் ஆவேசமாக பேசியுள்ளார்.  

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.