Cinema News
பாரதிராஜா பண்ண காரியத்துக்கு தக்க பதிலடி கொடுத்த சரிதா! இப்படியெல்லாம் நடந்துச்சா?
தென்னிந்திய நடிகைகளில் மிகவும் போற்றப்படும் நடிகையாக வலம் வருபவர் நடிகை சரிதா. சிறந்த அறிவும் அழகும் வாய்க்கப்பெற்ற ஒரு நல்ல நடிகை சரிதா. வழக்கம் போல பாலசந்தர் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார் சரிதா. 1978 ஆம் ஆண்டும் தொடங்கிய இவரது சினிமா பயணம் இன்று மாவீரன் படம் வரை தொடர்ந்து கொண்டு வருகிறது.
இரு படங்கள்
இவரது சினிமா கெரியரில் அச்சமில்லை அச்சமில்லை, வண்டிச்சக்கரம் போன்ற படங்களை குறிப்பிடத்தக்க படங்களாக கொள்ளலாம். ஏனெனில் இந்தப் படங்களில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகை என்ற பட்டத்தை வழங்கியது. இந்தப் படங்களை தவிர்த்து தப்பு தாளங்கள், நெற்றிக்கண், அக்னி சாட்சி, புதுக்கவிதை போன்ற பல படங்களை குறிப்பிடலாம்.
பாக்யராஜ், ரஜினி, மோகன், சத்யராஜ் போன்றவர்களின் படங்களில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவே வலம் வந்தார். நடிப்பது மட்டுமில்லாமல் சிறந்த பின்னனி குரல் கொடுப்பவராகவும் இருந்து வந்திருக்கிறார். நதியா, நக்மா போன்றவர்களுக்கு ஒரு சில படங்களில் பின்னனி குரல் கொடுத்திருக்கிறாராம் சரிதா.
திரைப்படத் துறையில் தனது நீண்ட நாள் சினிமா வாழ்க்கையில் அவர் வாங்கிய விருதுகளின் பட்டியல் ஏராளம். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சரிதா.
இதையும் படிங்க : சிவாஜிக்கு அவர் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்தது! அதை பாராட்டியது யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
பாரதிராஜாவுக்காக பொறுத்துக் கொண்ட சரிதா
இந்த நிலையில் பாரதிராஜாவின் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு சரிதாவிற்கு வந்திருக்கிறது. வேதம் புதிதி என்ற படத்தில் காந்திமதியின் செகண்ட் வெர்சனாக நடித்திருப்பார் சரிதா. அதாவது காதுகளில் நீண்ட கம்மல் போட்டு வெற்றிலை பாக்கு எல்லாம் போட்டு அவருக்கு சற்றே பொருத்தமில்லாத கதாபாத்திரம். அந்தப் படத்தில் நடிக்கும் போது சரிதாவுக்கு 21 வயசாம். முதலில் நடிக்க தயங்கினாராம். அதன் பிறகு பாரதிராஜா படம், மிஸ் பண்ணக் கூடாது என்ற காரணத்தால் ஓகே சொல்லியிருக்கிறார்.
சரிதாவின் வீட்டில் வந்து லுக் டெஸ்ட் எடுத்தார்களாம். இப்போது அந்தப் படத்தில் இருக்கும் லுக் இல்லையாம். வேறொரு லுக்காம். எல்லாம் ஓகே ஆன பிறகு சரிதா ‘இன்னொரு நடிகை யார் நடிக்கிறார்’ என்று கேட்டாராம். அதற்கு அவர்கள் 15 வயசு மதிக்கத்தக்க ஒரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் முடிந்து ஸ்பாட்டுக்கு போன இடத்தில் சரிதாவிற்கு ஒரே ஷாக்காம். ஏனெனில் அங்கு அமலா இருந்தாராம்.
டோட்டல் அப்செட்
15 வயசுனு சொன்னாங்க, இவரா? இவருக்கா நம்ம மாமியார் என்று கொஞ்சம் அதிருப்தியில் இருந்தாராம் சரிதா. மேலும் சரிதாவின் லுக்கையும் மொத்தமாக மாற்றிவிட்டார்களாம். சரிதாவை பொறுத்தவரைக்கும் ஒரு படத்திற்கு கமிட் ஆகிவிட்டோம் என்றால் அங்கு போன பிறகு என்ன நடந்தாலும் எதுவுமே சொல்லமாட்டாராம். அதே நிலைமைதான் இந்த வேதம் புதிதி படத்திலும் நடந்ததாம்.
இதையும் படிங்க : நான் ஒன்னு நினைச்சி போனேன்.. விஜயகாந்த் வேற ஒன்னு பண்ணிட்டார்!.. லிவிங்ஸ்டன் சொன்ன சீக்ரெட்..
பாரதிராஜா இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கல, இருந்தாலும் அவர் படத்த மிஸ் பண்ணக் கூடாது என்றுதான் இந்தப் படத்தில் பிடிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை என்று நடித்துக் கொடுத்தேன், மேலும் படம் முழுக்க ஆர்வம் இல்லாமல் தான் நடித்தேன், எல்லாம் முடிஞ்சு அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் என் செக்கை அப்படியே திருப்பி கொடுத்து விட்டேன், ஆனால் பாரதிராஜா மேல் எப்பொழுதும் எனக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது என்று சரிதா கூறினார்.
என்கிட்ட சொன்னது வேறு, ஆனால் நடந்தது வேறு, லுக் டெஸ்ட்டில் இருந்து படத்தின் நடிகர் நடிகைகளை தேர்வு செய்தது வரைக்கும் மொத்தமாக மாத்திட்டாங்க, அதனாலேயே கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாகவும் சரிதா கூறினார்.