ஜெமினியுடன் நடிக்க வேறொரு நடிகையை சிபாரிசு செய்த சாவித்ரி!.. ஏன்னு தெரியுமா?.. அங்கதான் டிவிஸ்ட்..
ஒரு சமயம் நடிகர் திலகமே பார்த்து மிரண்ட நடிகை தான் நடிகையர் திலகம் சிவாஜி. அவரே ‘படத்தில் நாங்கள் தோன்றினால் கண்டிப்பாக எங்களுக்குள் நடிப்புப் போட்டி இருக்கும்’ என்று சிவாஜியே சொன்னதுண்டு. அந்த அளவுக்கு நடிப்பில் பட்டையை கிளப்பியவர் சாவித்ரி. அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரியான அழகில் காட்சியளித்தார்.
மிஸ்ஸியம்மாவாக சாவித்ரி தோன்றியது ஒரு அழகு, பாசமலர் சாவித்ரியாக ஒரு அழகு, ஊதிப்பெருத்த சாவித்ரியாக ஒரு அழகு என வெவ்வேறு காலகட்டத்தில் மிக அழகாக தோன்றினார். இவருக்கு போட்டியாக எத்தனையோ நடிகைகள் வந்தாலும் நடிப்பில் இவருடன் போட்டி போட முடியவில்லை. இவருக்கு இணையாக சரோஜா தேவி தான் அதிக படங்களில் நடித்தார்.
ஆனால் நடிகையர் திலகம் என்ற பட்டம் சாவித்ரிக்கு மட்டுமே. இப்படி வெற்றி கனியை ருசித்து வந்த சாவித்ரியின் வாழ்க்கையில் வந்தவர் தான் நடிகர் ஜெமினி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னரும் இருவரும் வெவ்வேறு படங்களில் நடிக்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் ஜோடியாகவும் பல படங்களில் நடித்தனர்.
சில சமயங்களில் ஜெமினி நடித்த படங்களுக்கு உதவியாகவும் இருந்திருக்கிறார். அந்த வகையில் ஜெமினி, சரோஜா தேவி சேர்ந்து நடித்த படம் ‘பணமா பாசமா’ என்ற திரைப்படம். . இந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எப்பொழுதுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் இயக்கும் படங்களில் சில கதாபாத்திரங்களை பயன்படுத்துவார். அப்படி பட்ட ஒரு கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் நடித்திருக்கும் மாமியார் ரோல்.
அந்த ரோலில் நடித்திருப்பவர் வரலட்சுமி என்ற நடிகை. வரலட்சுமியை இந்த ரோலுக்கு சிபாரிசு செய்தவர் சாவித்ரிதானாம். இந்த கதாபாத்திரம் மிகவும் மோசமான மாமியாராகவும் உரத்த குரலில் பேசுபவராகவும் இருக்க வேண்டுமாம். ஆனால் ஐந்து நாள்கள் ஆகியும் அவர் சரியாக நடிக்கவில்லையாம். உடனே இயக்குனர் நேராக சாவித்ரியிடம் வந்து ‘ நீ சொல்லித்தானே வரலட்சுமியை இந்த ரோலுக்கு நடிக்க வைத்தேன். ஆனால் ஐந்து நாள்களாகியும் சரியா நடிக்க வரல. நாளைக்கும் இதே போல் நடித்தால் நீ தான் மாமியார் ரோலுக்கு நடிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டாராம்.
இதற்கு முன் மாமியாராக சாவித்ரியை தான் இயக்குனர் கேட்டிருக்கிறார். ஆனால் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் ஜெமினி நடிக்கும் போது தான் மாமியாராக நடித்தால் சரிவராது என்பதற்காகவே சாவித்ரி தவிர்த்து விட்டாராம். மறு நாள் சாவித்ரி வரலட்சுமி வீட்டிற்கு சென்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எதிர்பார்ப்பதை விளக்கமாக கூறியிருக்கிறார். அவ்ளோ தான் அடுத்த நாள் படப்பிடிப்பில் வரலட்சுமி வெளுத்து வாங்கிவிட்டாராம். இப்பொழுது கூட அந்தப் படத்தை பார்க்கும் போது வரலட்சுமியின் கதாபாத்திரம் தான் ஜொலிக்கும் என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பற்றிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாரதிராஜா எடுத்த ஃப்ளாப் படத்தை பிளான் பண்ணி ஓட வைத்த எம்.ஜி.ஆர்… இதெல்லாம் எப்படி யோசிக்கிறாங்களோ?