சாவித்ரிக்கு மூணு காதல்...பழி வாங்கிய எம்.ஜி.ஆர்...பல வருட சீக்ரெட்டை பகிர்ந்த பிரபலம்...
தன்னுடைய பட்டுப் போன்ற அழகாலும் கொஞ்சும் பேச்சாலும் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கிட்டத்தட்ட 300 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ஜெமினியின் மீது தீராத காதல் கொண்ட சாவித்ரி வீட்டை விட்டு வெளியேறி ஜெமினியின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். திருமணத்திற்கு பிறகும் இருவரும் ஒன்றாக படங்களில் நடித்து வந்தனர்.
இதையும் படிங்கள் : கமலின் நாயகன் படம் சத்யராஜ் படமா…? புதுப் புரளியை கிளப்பும் திரைப்பிரபலம்…!
இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வெளியிட்டனர். அந்த படத்தில் சாவித்ரி கதாபாத்திரமாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து அந்த கதாபாத்திரத்திற்காக தேசிய விருதையும் பெற்றனர். இந்த படத்தை பார்த்த ஜெமினியின் வீட்டார் சில பேர் ஜெமினியால் தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார் என காட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றமையால் கோபமடைந்து சாவித்ரிக்கு பல பேருடன் ரகசிய தொடர்பு இருந்ததாக தெரிவித்தனர்.
இதை பற்றி சமீபத்தில் பேட்டி அளித்த நடிகர் ராஜேஷ் சாவித்ரியின் சொந்த விஷயங்களுக்குள் போக விரும்பவில்லை. எனினும் ஜெமினிக்கும் சில பேருடன் தொடர்பு இருந்தது . சாவித்ரிக்கும் இருந்திருக்கலாம் என கூறி சாவித்ரியிடம் ஒரு மூன்று பேர் ரகசியமாக தொடர்பில் இருந்ததை அறிந்த நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்து இனிமே உங்களை பார்த்தேன் தொலைச்சு புடுவேன் என்று மிரட்டியும் அனுப்பியிருக்கிறாராம்.. இன்னும் சொல்லப்போனால் அந்த மூன்று பேரில் ஒருவரை பழி வாங்கவும் செய்தாராம். இதற்காக எம்.ஜி.ஆருக்கு கெட்டப்பெயர் தான் மிச்சம். இருந்தாலும் சாவித்ரிக்காக இதை பண்ண எம்.ஜி.ஆருக்கு சாவித்ரியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளி கூட இருந்ததில்லை என்று நடிகர் ராஜேஷ் தெரிவித்தார்.