மனைவியை பாக்க அனுமதியா?.. ஜெமினிக்கே இந்த நிலைமை?.. நடிகரின் பிடியில் இருந்த சாவித்ரி!..
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்களில் குறிப்பிடத்தக்க நடிகர் ஜெமினிகணேசன். மூவேந்தர்களாக சினிமாவை ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்தனர். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி என அசைக்க முடியாத தூண்களாக வலம் வந்து கொண்டிருந்தனர். ஜெமினி கணேசன் முழுவதுமாக காதல் கதைகளை அடிப்படையாக கொண்ட படங்களில் நடித்து பெண்களின் மனதில்
ஈஸியாக இடம் பிடித்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் நடிகை சாவித்ரியின் மனதில் சேர்ந்தே இடம்பிடித்தார். திருமணமாகி ஜெமினிக்கு ஏற்கெனவே குழந்தைகள் இருக்கிற விஷயம் தெரிந்தும் ஜெமினியின் மீதுள்ள தீராத காதலால் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க : ஒரு பெண்ணுக்காக படப்பிடிப்பையே ரத்து செய்த ஜெய்சங்கர்!.. யார் அந்த பெண் எதுக்காக தெரியுமா?..
இந்த செய்திகள் எல்லாம் ஏற்கெனவே அறிந்த நாம் மகாநடி படத்தின் மூலமும் சில விஷயங்களை மேலும் தெரிந்து கொண்டோம். இந்த நிலையில் மற்றுமொரு அறியாத விஷயத்தை அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒரு பேட்டியின் போது கூறினார்.அதாவது நடிகை சாவித்திருக்கும் நடிகர் சந்திரபாபுவிற்கு நெருக்கமான நட்பு இருந்து வந்ததாம்.
தமிழ் சினிமாவையே ஆச்சரியப்படும் அளவிற்கு அவர்களுக்கு அந்த நட்புறவு நீடித்திருக்கிறது. மேலும் சொல்லப்போனால் சாவித்திரியை பார்க்க வேண்டுமென்றால் சந்திரபாபுவின் அனுமதி அவசியமானதாக இருந்திருக்கிறது. இதில் ஜெமினியும் விதிவிலக்கு இல்லை.
ஜெமினியே பார்க்க நினைத்தாலும் சந்திரபாபுவிடம் அனுமதி கேட்க வேண்டுமாம். ஆனால் இந்த உரிமை ஒரு காலத்தில் நின்று விட்டது. சாவித்திரி உடல் நிலை சரியில்லாத நேரத்தில் சந்திரபாபு வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தார். அதனால் சாவித்திரிக்கு எந்த உதவிகளும் செய்ய முடியவில்லை.
அப்போது உதவியவர் ஜெமினி தான். அதுவும் பத்திரிக்கைகளில் தாறுமாறாக ஜெமினியை பற்றி விமர்சனம் செய்ததன் காரணமாகவே சாவித்திரிக்கு ஜெமினி உதவினார் என்று காந்தராஜ் கூறினார்.