மலையாள சினிமாவில் நடக்கும் பிரச்சினைக்கு விக்டிமே நான்தான்.. சரவெடியாக மாறிய ஷகீலா

shakeela 1
Actress Shakeela: மலையாள சினிமா உலகமே இன்று கதி கலங்கி போய் நிற்கின்றது. அங்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி அவ்வப்போது நடிகைகள் புகார்கள் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதில் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் அளித்து அவர் மீது தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மலையாளத்தில் அம்மா நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர் சித்தி. அவர் மீது தான் இப்போது அந்த புகார் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அதுபோக இன்னும் யாரெல்லாம் இதில் சிக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த புகாரை அடுத்து அம்மா நடிகர் சங்க பதிவிலிருந்து மோகன்லால் பதவி விலகி இருக்கிறார் .இதுவும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகுவது ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என ஒரு பேட்டியில் நடிகை ஷகிலா கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் படம் விஜயிற்காக எழுதியது இல்லை.. இந்த நடிகருக்குதான் எழுதியதாம்…
அதுமட்டுமல்லாமல் கடந்த 2000 ஆம் ஆண்டு சமயத்தில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி விளக்கும் ஷகிலா அன்று கேரளாவில் எனக்கு யாராவது உறுதுணையாக இருந்தார்களா? அப்படி இருந்திருந்தால் இன்று அங்கு நடக்கும் பிரச்சனைக்கு விக்டிமே நான் தான். பல உண்மைகள் எனக்கு தெரியும். அந்த நடிகைகளுக்கு பக்கபலமாக இன்று நான் குரல் கொடுத்திருப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
அதாவது மலையாளத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஷகீலா, ஆபாச படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்றவர், அப்படி அவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்த நேரத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலரால் இவருக்கு மிரட்டல்கள் வந்திருக்கின்றன, இவருடைய படங்களை சென்சாருக்கு போக விடாமல் தடுத்திருக்கின்றனர் ,
இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?
அப்படியே போனாலும் அவருடைய படங்கள் மலையாளத்தில் ரிலீஸ் ஆக விடாமலும் தடுத்து இருக்கின்றனர். வெள்ளிக்கிழமையானால் ஷகீலாவின் படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கும் நடிகர்களின் படங்களை விட லட்சங்களில் படத்தை எடுக்கும் சகிலாவின் படங்கள் தான் அதிக வசூலை பெற்றிருக்கின்றன.
இதனால்தான் இவர் மலையாளத்தில் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் அந்த முன்னணி நடிகர்களால் இவர் விரட்டியடிக்கப்பட்டார். இதற்குக் காரணம் கேரளாவில் முழுவதும் ஒரு ஆணாதிக்கம் தான் நடக்க வேண்டும் என அவர்கள் எண்ணியிருந்தார்கள் என ஷகிலா கூறியிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு யாருமே உறுதுணையாக இல்லையே .அப்படி இருந்திருந்தால் இன்று அந்த பிரச்சனைக்கு நான் குரல் கொடுத்திருப்பேன். எனக்கு தெரிந்த பல விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதையும் சொல்லி இருப்பேன் என ஷகிலா கூறியிருக்கிறார்.
இதையும்படிங்க: நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டா செருப்பால அடிங்க!.. பொங்கும் விஷால்!…