ஆசை இருந்துச்சு.. வருஷத்துக்கு ஒருத்தன்!.. நான் பண்ண ஒரே தப்பு?.. ஷகீலா ஓப்பன் டாக்..

by Rohini |   ( Updated:2023-04-15 03:10:55  )
shakeela
X

shakeela

மலையாளம் ,தமிழ் என இருமொழிகளிலும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷகீலா. பொதுவாக கவர்ச்சி படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.இவருக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். எதையும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்.

படங்களில் வாய்ப்புகள் குறைந்ததும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கினார் ஷகீலா. சிவா மனசுல சக்தி, அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் சின்ன ரோல்களில் வந்து நடித்திருப்பார்.

நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு கம்பேக் கொடுத்தார் ஷகீலா. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த தளம் சரியானதாகும். மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் ஷகீலாவை அம்மா என்றே அழைக்க ஆரம்பித்தனர். அந்த பிரபலத்திற்கு பிறகு பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வரும் அனைத்து பிரபலங்களின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படையாகவே கேட்டு வருகிறார் ஷகீலா.

அந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவரை பேட்டி அளித்த ஒரு தனியார் சேனல் ஷகீலாவின் திருமணத்தை பற்றி கேட்டது. ‘ஏன் உங்களுக்கு திருமணமே ஆகலைனு வருத்தப்பட்ட்டுதுண்டா?
அந்த ஆசை இல்லவே இல்லையா?’ என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஷகீலா ‘திருமண ஆசை இல்லாமல் எந்த பெண்ணும் இருக்க மாட்டார்கள், எனக்கும் இருந்துச்சு, 2 வருஷத்திற்கு ஒருத்தன், 4 வருஷத்திற்கு ஒருத்தன், ஒரு வருஷத்திற்கு ஒருத்தன் என்று இருந்தார்கள்’ என்று கூறினார். அதற்கு அந்த தொகுப்பாளினி ‘அப்போ இத்தனை பேரை மாத்திருக்கீங்கனா உங்ககிட்ட தான் பிரச்சினை இருக்கா?’ என்று கேட்டார்.

இதையும் படிங்க : அர்ஜூன் படத்தை பார்த்து பாதியிலேயே தியேட்டரை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிய ரசிகர்கள்… ஏன் தெரியுமா?

அதற்கு ஷகீலா ‘ஆமாம், நான் பண்ண ஒரே தப்பு, என்னை பற்றி யோசிக்கிறத விட்டு என் குடும்பத்தை பற்றி நிறைய யோசித்தேன், அதனால் தான் இவ்ளோ பிரச்சினையும்’ என்று கூறியிருந்தார்.

Next Story