விஜய் கூட நான் நடிக்க மாட்டேன்!.. முரண்டு பிடித்த ஷகிலா!.. தளபதி என்ன பண்ணார் தெரியுமா?!....

by சிவா |   ( Updated:2024-09-13 05:04:19  )
vijay
X

#image_title

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தனியாக நடிக்க முடியாது. கண்டிப்பாக பல நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும். எனவே, கலகலப்பாக பேசும் பழக்கம் இருக்கும் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு தளத்தையே கலகலப்பாக வைத்திருப்பார்கள். இயக்குனர் சுந்தர் சி இயக்கும் படங்களின் படப்பிடிப்பு போய் பார்த்தால் அது புரியும்.

அவரின் படப்பிடிப்பு இடம் மிகவும் ஜாலியாக இருக்கும். நடிகர் விஜய் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் இப்போதாவது கொஞ்சம் ஜாலியாக இருக்கிறார். ஆனால், முன்பெல்லாம் அவர் அப்படி இருக்கமாட்டார். மிகவும் அமைதியாக இருப்பார். இயக்குனர் அழைத்து என்ன சொல்கிறாரோ அதை செய்துவிட்டு போய்விடுவார்.

இதையும் படிங்க: சிம்ரனுக்கு திடீரென வந்த விபரீத ஆசை!.. அட்வைஸ் சொல்லி அனுப்பி விஜய்!…

தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் கூட அதிகம் பேசமாட்டார். அதுவும், கேரவான் கலாச்சாரம் வந்த பின் நடிக்கும்போது மட்டுமே கேரவானிலிருந்து இறங்கி வருவார். ஷாட் முடிந்ததும் கேரவானுக்கு போய்விடுவார். துவக்கத்தில் இது பலருக்கும் பிடிக்காமல் இருந்தது.

ஆனால், நாட்கள் போகப்போக விஜய் இப்படித்தான் என்பது அவர்களுக்கு பழகிவிட்டது. நெஞ்சிலே படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார் நடிகை ரோஜா. ஒருமுறை பேட்டியில் ‘விஜய் எதுவுமே பேசவில்லை. அந்த ஷூட்டிங் எப்போது முடியும் என எனக்கு ஆகிவிட்டது.. பிடிக்கவே இல்லை’ என சொல்லி இருந்தார் ரோஜா.

vijay 69

vijay 69

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகை ஷகிலா ‘அழகிய தமிழ் மகன் படத்தில் விஜயுடன் சில காட்சிகளில் நடிக்க வேண்டும் என அழைத்தார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘எனக்கு விஜயுடன் காம்பினேஷேன் வேண்டாம். ஏன்னா அவர் பேசவே மாட்டாரு.. எனக்கு அது செட் ஆகாது’ என சொன்னேன்.

சரி என சொன்னவர்கள் எனக்கு முதல் காட்சியே விஜயுடன் வைத்துவிட்டார்கள். என்னை பார்த்த விஜய் ‘ஹாய் ஷக்கி’ என்றார். யூனிட்டே என்னை திரும்பி பார்த்தது. எனக்கு எப்படி ரியாக்ட் செய்வதன்றே தெரியவில்லை. இவரையா நாம் தப்பாக சொன்னோம் என ஆகிவிட்டது. அவர் அதிகம் பேசமாட்டார் என்றாலும் திடீரென இப்படி சர்ப்பரைஸ் கொடுப்பார் என்பது அப்போதுதான் எனக்கு தெரியும்’ என ஷகிலா சொல்லி இருக்கிறார்.

Next Story