அஜித்தை பார்க்க முடியாமல் அழுத ஷாலினி!. அப்பதான் அவங்க லவ்வே புரிஞ்சது!. ரகசியம் சொன்ன இயக்குனர்..

AK and Shalini
Ajithkumar: அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜித். பல திரைப்படங்களிலும் சாக்லேட் பாயாக நடித்து ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி பின்னர் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது அப்படத்தில் அவருடன் நடித்த ஷாலினியை அஜித் காதலித்தார்.
படப்பிடிப்பு தளத்தில் மறைமுகமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்திகொண்டே இருந்தார் அஜித். ஒருநாள் அப்படத்தின் இயக்குனர் சரணிடம் ‘ஷூட்டிங்க சீக்கிரம் முடிச்சிடுங்க.. இல்லனா நான் ஷாலினியை லவ் பண்ணிடுவேன்’ என சொல்லி சிரித்தாராம். இதைக்கேட்டு வெட்கப்பட்டு சிரித்திருக்கிறார் ஷாலினி.
இதையும் படிங்க: பைக்கையே தொடக் கூடாதுனு சொன்னவர் ஷாலினி! இப்போது அஜித்தை அவர் விருப்பப்படி விட என்னக் காரணம் தெரியுமா?
அதேபோல், அஜித்துக்கு பிறந்தநாள் வந்தபோது அவருக்காக சில பரிசு பொருட்களை வாங்கிய ஷாலினி அதை இயக்குனர் சரணிடம் கொடுத்து ‘இதை இன்று இரவு ஒரு மணிக்கு அஜித்தின் அறையில் வைத்துவிடுங்கள்’ என சொல்லியிருக்கிறார். சரணும் அப்படியே அந்த பொருட்களை வைத்துவிட்டார்.
பிறந்த நாள் அன்று காலை அந்த பரிசு பொருட்களை பார்த்த அஜித் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அது எல்லாமே அவருக்கு பிடித்த பொருட்களாக இருந்தது. அப்போதே ஷாலினி தன்னை விரும்புகிறார் என்பதை அஜித் புரிந்துகொண்டாராம். இதுபற்றி இயக்குனர் சரண் ஊடகம் ஒன்றில் பேசியபோது மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை!.. முரட்டு கோபக்காரரான அஜித் சாதுவாக மாறிய அந்த சம்பவம்!.
அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு மூனாறில் நடந்தது. நானும் அஜித்தும் கொச்சின் சென்று அங்கிருந்து 3 மணி நேரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு போனோம். கொச்சினை தாண்டியபின் போன் செய்து பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவழியாக போய் சேர்ந்தேம். எங்களுக்கு முன்பே ஷாலினி அங்கே வந்துவிட்டார்.
எங்களை பார்த்ததும் ‘ஏன் எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை. அஜித்துக்கு என்னவானது என பயந்துவிட்டேன்’ என அழத்துவங்கி விட்டார். அப்போதுதான் இருவரும் அவ்வளவு நெருக்கமாகிவிட்டார்களா என நான் புரிந்துகொண்டேன். நான் நினைத்தபடியே இருவரும் திருமணம் செய்துகொண்டு விட்டனர்’ என அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அஜீத்துக்காக பார்த்து பார்த்து சட்டையை வடிவமைத்த ஷாலினி… காதலிக்கே சஸ்பென்ஸ் வைத்த தல…!