அஜித்துக்கே பிடித்தமான கிஃப்ட்! பிறந்த நாளின் போது ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரலாகும் புகைப்படம்
Ajith Shalini: இன்று அஜித் தனது 53 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மே ஒன்று உழைப்பாளர் தினம் என்பதையும் தாண்டி ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் தினமாக அஜித் பிறந்தநாள் மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு அஜித்தின் மீது தமிழ் ரசிகர்கள் தங்கள் உயிரையே வைத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் அஜித் ஒரு உயரமான அந்தஸ்தை அடைந்திருக்கிறார்.
ஆரம்ப காலங்களில் அவர் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் என அனைத்தும் நம் அனைவருக்கும் தெரிந்தது. எத்தனையோ போராட்டங்களை தாண்டி இன்று தமிழக மக்களால் தல என்று அழைக்கப்படும் அளவுக்கு அஜித் வளர்ந்து நிற்கிறார். அவருடைய பிறந்த நாளின் போது அஜித் ரசிகர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை எப்படி கொண்டாடுவார்களோ அதேபோல அஜித் பிறந்தநாளையும் பட்டாசுகள் வெடித்து மேளதாளங்களுடன் ஆங்காங்கே கொண்டாடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் உருவான சோக கதை! யுவனின் சோம்பேறித்தனத்தால் ஸ்தம்பித்த ‘பில்லா’ டீம்
ஒவ்வொரு அஜித் பிறந்தநாளின் போதும் அவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது வழக்கம். அதேபோல அஜித்தின் இரண்டு திரைப்படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் இன்று வெளியாகுமா என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அஜித்திற்கு அவருடைய காதல் மனைவியான ஷாலினி ஒரு சர்ப்ரைஸ் ஆன கிப்ட் ஒன்றை பரிசாக வழங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அது என்னவென்றால் அஜித்துக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள் என்றால் அது பைக். அதிலும் மிகவும் விலை உயர்ந்த பைக்கான டுகாட்டி பைக்கை ஷாலினி இன்று அஜித்துக்கு அவருடைய பிறந்தநாள் பரிசாக வழங்கி இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அது சம்பந்தமான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன
இதையும் படிங்க: தளபதி என்கிட்ட அந்த டயலாக்கை தான் சொல்ல சொல்லி கேட்பாரு!.. அரிசி மூட்டை ஜெனி தியேட்டரில் ஆட்டம்!..