Categories: Cinema News latest news

மாறி மாறி சிரஞ்சீவியை சந்திக்கும் அஜித் குடும்பம்! என்னவா இருக்கும்? வைரலாகும் புகைப்படம்

Ajith chiranjeevi: தமிழ் சினிமாவில் அஜித் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். கோலிவுட்டில் இவருக்கு என ஒரு நல்ல ஓப்பனிங் இருந்து வருகிறது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளி வந்த துணிவு படம் நல்ல ஒரு பெரிய வெற்றியை பெற்ற படமாக அமைந்தது. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் எந்தவொரு படங்களும் வெளிவரவில்லை. அதனால் அஜித்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் பெருமளவு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஜித் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இதனால்தான் ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என சொன்னேன்!.. வதந்திகளுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த கட்டப்பா!…

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு பக்கத்தில்தான் சிரஞ்சீவி சம்பந்தப்பட்ட ஒரு படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்ததாம். இதை அறிந்து கொண்ட அஜித் சிரஞ்சீவியை நேரடியாக அவருடைய செட்டுக்கே போய் பார்த்தார்.

shalini

அது சம்பந்தமான புகைப்படம் வெளியானது. அப்போது சிரஞ்சீவியும் அவருடைய இணையதள பக்கத்தில் அஜித்தை பார்த்தது, ஷாலினி அவருடைய படத்தில் நடித்தது முழுவதையும் பகிர்ந்து அவருடைய மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மோகனின் முதல் படப்பிடிப்பு அனுபவமே இவ்ளோ ஜல்சாவா? ரொம்ப கொடுத்து வச்சவரு போல..!

இந்த நிலையில் இன்று திடீரென அஜித்தின் குடும்பம் முழுவதும் சிரஞ்சீவியை பார்த்த புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஷாலினி, ஷாமிலி, ஷாலினியின் அண்ணன் என ஆகிய மூவரும் சிரஞ்சீவியை சந்தித்து அவர்களுடைய சந்தோஷத்தை பகிர்ந்திருக்கின்றனர்.

Published by
Rohini