இதென்ன ஹேர் ஸ்டைல்? வெளியான ஷாலினியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கதறிய அஜித் ரசிகர்கள்

by Rohini |   ( Updated:2023-12-15 10:58:29  )
ajith
X

ajith

Actress Shalini: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் மனதை கெடுத்த கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து அப்பொழுதே மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

ரஜினி , அர்ஜூன் ஆகியோர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். காதலுக்கு மரியாதை படம்தான் என்னப் பொண்ணுப்பா என்று சொல்லுமளவுக்கு இளைஞர்களின் மனதை கெடுத்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக இருந்தார் ஷாலினி.

இதையும் படிங்க: பலே ஆளுதான்! படம் முழுக்க டூப் போட்டு ஏமாத்திய கமல் – ஆதங்கத்தை வெளிப்படுத்திய அந்த டூப் நடிகர் யார் தெரியுமா?

விஜய் - ஷாலினியின் கெமிஸ்ட்ரி அந்தப் படத்தில் பார்ப்போரை பொறாமை பட வைத்தது. அதனை அடுத்து அலைபாயுதே என்ற பெரிய ஹிட் படம். அப்படி ஒரு படம் வெளியாகும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

shalini

shalini

காதலை வெறுப்பவர்கள் கூட அந்தப் படத்தை பார்த்த பிறகு காதலிக்க தொடங்குவார்கள். அப்படி ஒரு கதையம்சம். கதைகளத்தை மணிரத்தினம் சொட்ட சொட்ட காண்பித்திருப்பார். ஷாலினி நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

கடைசியாக அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்து சினிமாவிற்கு விடை கொடுத்தார். ஷாலினி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது அவருடைய அந்த ஹேர் ஸ்டைல்தான். ஃபீரி ஹேரில் பார்க்க அழகாக இருப்பார்.

இதையும் படிங்க: பலே ஆளுதான்! படம் முழுக்க டூப் போட்டு ஏமாத்திய கமல் – ஆதங்கத்தை வெளிப்படுத்திய அந்த டூப் நடிகர் யார் தெரியுமா?

அவர் நடித்த எல்லா படங்களிலும் சரி பொது இடங்களிலும் சரி. ஃபீரி ஹேரில்தான் ஷாலினியை பார்க்க முடியும். ஆனால் சமீபத்தில் வெளியான அவர் புகைப்படத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் ‘ஏன் அண்ணி? இந்த கொலவெறி’ என கேட்டிருக்கின்றனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. அந்த திருமணத்திற்கு ஷாலினியும் அவர் மகளும் வந்திருந்தார்கள். அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: இப்படியெல்லாம் காட்டினா நாங்க காலி!.. வாலிப பசங்க மனசை கெடுக்கும் அமைரா…

Next Story