எங்க வீட்ல வந்து உட்கார்ந்து மோகன்லால் செஞ்ச வேலை!.. பகீர் கிளப்பும் சீயல் நடிகை..
Mohanlal: சமீபகாலமாக மலையாள சினிமாவில் பாலியல் ரீதியாக நடக்கும் பிரச்சினைகள் குறித்து பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத நடிகர்கள் இந்த பிரச்சினையில் சிக்கியதுதான் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மோகன்லால் பெயரும் இதில் அடிபட்டிருப்பது பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக மலையாள சினிமாவை பற்றி பேசிய பிரபல சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் என்ன சொன்னார் என்பதையும் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். இதோ சாந்தி வில்லியம்ஸ் கூறியது: மலையாள சினிமாவில் இந்த மாதிரி விஷயங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இதையும் படிங்க: Biggboss Tamil: என்ன இவரு உள்ள போறாரா?… அப்போ அதுக்கு பஞ்சமே இல்ல!
மிகவும் இரிடேட்டிங் ஆன பீல்ட் தான் மலையாள சினிமா. என்னுடைய பூர்வீகம் கேரளா தான். அங்கு சும்மாவே இருக்க மாட்டார்கள். இவ்வளவு காலம் வெளியில் தெரியாமலேயே இருந்தது இப்பொழுது தான் தெரிய ஆரம்பித்திருக்கிறது. 18 வயதிலிருந்து 90 வயது உடைய பாட்டியை கூட விட மாட்டாங்க என மலையாள சினிமாவைப் பற்றி சாந்தி வில்லியம் கூறியதாக செய்யாறு பாலு தெரிவித்தார்.
மேலும் கதவை வந்து தட்டிக் கொண்டே இருப்பார்களாம். இது சாந்தி வில்லியம்ஸின் கோபத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது என்றும் செய்யாறு பாலு தெரிவித்தார். ஆனால் சாந்தி வில்லியம்ஸ் தமிழ் தெலுங்கு என பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் விஜய் நடித்த ஒரு படத்தில் நடிக்கும் பொழுது அதிகாலை 3 மணி அளவில் படப்பிடிப்பில் இருந்தாராம் சாந்தி வில்லியம்ஸ்.
அப்போது விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி கொண்டிருந்தார்களாம். சாந்தி வில்லியம் வெளியில் சேர் போட்டு அமர்ந்திருக்க கொசு கடியால் அவதிப்பட்டு கொண்டிருந்தாராம். உடனே விஜய் வந்து அவருடைய அறையில் தங்கும் படி சொல்லி இருக்கிறார். மேலும் ‘என்னுடைய காட்சி முடிய வெகு நேரம் ஆகும். அதனால் அதுவரை நீங்கள் என்னுடைய அறையில் தங்கிக் கொள்ளுங்கள்’ என சாந்தி வில்லியம்சை அனுப்பி வைத்தாராம் விஜய்.
இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ சம்பளம் இதுதான்… அட்ரா சக்கை…
மறுநாள் சாந்தி வில்லியம்ஸின் காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்ததாம். அதற்குள் விஜய் அவருடைய காட்சிகளை முடித்துவிட்டு சென்று விட்டாராம். இப்படிப்பட்ட ஒரு மனிதர் விஜய். பாதுகாப்பான சூழலில் இருந்ததாக அன்று நான் கருதினேன் என சாந்தி வில்லியம்ஸ் கூறினாராம். அதுமட்டுமல்லாமல் அந்நியன் படத்தில் சாந்தி வில்லியம்ஸ் நடித்திருக்கிறார். அப்போது ஒரு ட்ரெயின் சீன் வரும் .அந்த நேரத்தில் அனைவருக்கும் பசி எடுத்ததாம்.
அருகில் வாழைப்பழம் சில பழங்கள் எல்லாம் இருந்தாலும் அது புரொடக்ஷன் ப்ராடக்ட் என்பதால் அதை யாரும் தொடவில்லையாம். சாந்தி வில்லியம் பசியில் இருப்பதை உணர்ந்த விக்ரம் உடனே அவர் சாப்பிட வைத்திருந்த சுருள்பாசியை ஒரு டம்ளரில் கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாராம் விக்ரம். இதுதான் தமிழ் சினிமா. என்னை ஒரு அம்மாவாக அக்காவாக ஒரு சகோதரியாக இப்படித்தான் பார்க்கிறார்கள்.
இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ சம்பளம் இதுதான்… அட்ரா சக்கை…
மலையாள சினிமா அப்படி கிடையாது. குறிப்பாக என் கணவர் வில்லியம்ஸ் இருக்கும் பொழுது அசோக் நகரில் ஒரு பெரிய வீட்டில் தான் இருந்தோம். என் அம்மா மிக அற்புதமாக சமைப்பார். அப்போது மோகன்லால் எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மாவிடம் நண்டு, இறால், பிரியாணி எல்லாம் வாங்கி சாப்பிடுவார். அப்படி இருந்தவரிடம் என் கணவர் இறந்த பிறகு உதவிக்காக மோகன்லாலுக்கு போன் செய்தேன்.
போனே எடுக்கவில்லை. வந்து கூட பார்க்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு நன்றி கெட்ட நபர் தான் மோகன் லால் என சாந்தி வில்லியம்ஸ் கூறியதாக செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.