என் வயசு என்ன? எனக்கே நடந்திருக்கு.. இந்த வயசு நடிகையுமா அவங்க விடல?

by Rohini |   ( Updated:2024-08-31 14:08:13  )
shandhi
X

shandhi

Shanthi Williams: பாலியல் சீண்டல்கள் என்பது இப்போது எல்லா துறைகளிலும் சகஜமாக நடக்கக் கூடிய விஷயமாக மாறியிருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல் தன் இச்சைக்கு பெண்களை பல கொடுமைகள் செய்யும் எத்தனையோ ஆண்களை பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் கொல்கத்தா மருத்துவர் விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிப் போட்டது என்றே சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் பல ஊர்களில் 6 மாத குழந்தைகள் முதல் 60வயது பாட்டி வரை உள்ள யாரையும் விடுவதில்லை. அப்படிப்பட்ட செய்திகள் பலரின் இதயத்தை ரணமாக்கியிருக்கிறது. அந்த வகையில் இப்போது மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சர்ச்சைகள் குறித்து நடிகைகள் பகிரங்கமாக கூறிவருகிறாரகள். கேரள அரசின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: கோட் படத்தில் நடிக்க இருந்தது அந்த ஹீரோதான்.. அர்ச்சனா கல்பாத்தி சொன்ன சூப்பர் சேதி

இதில் மோகன்லாலின் பெயர் அடிக்கடி அடிபட்டுக் கொண்டே வருகின்றது. இது நாள் வரை மௌனம் காத்து வந்த மோகன்லால் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்கு தான் இருக்கிறேன் என கூறியிருக்கிறார். கூடிய சீக்கிரம் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் மலையாள சினிமாவை பற்றி தொடர்ந்து பேசி வரும் நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்தில் கூட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை கூறியிருக்கிறார். அதாவது ஆரம்பகாலம் முதலே மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருந்ததாகவும் எனக்கு 15 வயது இருக்கும் போதே இந்த மாதிரியான பிரச்சினைகள் சந்தித்திருக்கிறேன். அதனால்தான் மலையாள சினிமாவே வேண்டாம் என்று தமிழ் சினிமாவிற்கு வந்ததாக சாந்தி வில்லியம்ஸ் கூறியிருக்கிறார்.

shandhi

shandhi

இதையும் படிங்க: கோட் பட பட்ஜெட்!.. விஜயின் சம்பளம் இதுதான்!. அட அர்ச்சனாவே சொல்லிட்டாங்களே!…

மேலும் மிகவும் போற்றத்தக்க நடிகராக பார்த்த சித்திக் இந்த பிரச்சினையில் மாட்டியிருப்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் சாந்தி வில்லியம்ஸ் கூறியிருக்கிறார். மேலும் ஒரு விழாவில் நடுவே மோகன்லால், இடது பக்கம் சித்திக், வலதுபக்கம் மம்மூட்டி ஆகியோர் உட்கார்ந்திருக்க மேடையில் ஒரு பிரபல நடிகரின் மகள் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தாராம்.

அவரை பார்த்ததும் மோகன்லால் காட்டக் கூடாத விரல் சைகையை காட்டினாராம். அதிலிருந்தே அவர் மீது இருந்த மரியாதை போய்விட்டது என்றும் வீட்டில்தான் மனைவி இருக்காங்களே. அப்படி இருக்கும் போது பாவப்பட்ட பெண்களை தேடி ஏன் அலைகிறார்கள் என்றும் கேள்வி கேட்டிருக்கிறார் சாந்திவில்லியம்ஸ். மேலும் எனக்கு இந்த வயதிலேயும் அப்படிப்பட்ட பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார். ஒரு மலையாள தயாரிப்பாளர் குடித்துவிட்டு வந்து சாந்திவில்லியம்ஸ் இருந்த அறையின் கதவை தட்டியதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தின் 4வது சிங்கிளும் போச்சா? மொத்தமா ஏமாத்திபுட்டாங்கப்பா..

Next Story