Connect with us
shanthi williams

Cinema News

90 வயசு கிழவியா இருந்தாலும் விடமாட்டாங்க!… நைட் கதவை தட்டுவாங்க!.. நடிகை பகீர் பேட்டி..

மலையாள சினிமா உலகில் தற்போது பரபரப்பாக நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி புகார் தெரிவித்து வருகின்றனர். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நடிகை சாந்தி வில்லியம்ஸ் மலையாள சினிமா உலகைப் பற்றி இப்போது விளக்கம் கொடுக்கிறார். அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி என்ன சொல்கிறார்னு பாருங்க.

எனக்கு மலையாள இன்டஸ்ட்ரியைப் பற்றி பேசவே விரும்பல. அங்கு நிறைய பாலிடிக்ஸ் இருக்கு. நீ பெரியவனா, நான் பெரியவனான்னு ஒரு சில பாலிடிக்ஸ் எல்லாம் அங்கு இருக்கு. இன்னொன்னு பெண்கள் அங்கு சேஃபா போக முடியாது. 68வயசு கிழவியா இருந்தாலும், 90வயசு கிழவியா இருந்தாலும் ராத்திரி வந்து கதவைத் தட்டுற கேரக்டர்ஸ் தான் அங்க இருக்காங்க. அது மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்கல.

Also read: குஷி படத்தை பற்றி பேசி வசமா மாட்டிக்கிட்ட பிரியங்கா மோகன்! கோலிவுட்டில் இனி அவ்ளோதான்

நான் வந்து இத்தனை வருஷம் இருக்கிறேன். ஒரு நாள் கூட இங்கு யாரும் அப்படி நடந்துக்கல. அதற்காக தமிழ், ஆந்திரா சினி உலகை நான் கையெடுத்துக் கும்பிடறேன்.

இங்கு உள்ளவர்கள் உணர்வுகள், வயசைப் புரிஞ்சவங்க. அதையும் மீறி நடக்குதுன்னா அதை நாம தடை போட முடியாது. அது அவங்க அவங்க விருப்பத்தைப் பொருத்து இருக்கு.

ஒரு பொண்ணு அத்தனை கஷ்டத்தையும், துன்பத்தையும் போக்குறதுக்குத் தான் துணிஞ்சி இந்த மாதிரி தவறை செய்றாங்க. இந்த உலகத்துல வாழணுமேன்னு நினைக்கிறாங்க. அவங்க அட்ஜெஸ்ட்மெண்டுக்குக் கூப்பிட்டாங்கன்னு ஏன் பப்ளிஷ் பண்றீங்க. உங்களுக்கு விருப்பமில்லையா. சொல்லிட்டுப் போயிடுங்க. எங்களுக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொல்லுங்க. ஆனா இதை சொல்லக்கூடிய நபர்கள் தான் தவறையே செய்றாங்க.

இன்னிக்கு சொன்ன அந்த ஆர்டிஸ்ட் இந்த இன்டஸ்ட்ரிக்குள்ளேயே இல்லை. ஒரு சில விஷயங்களைச் சொல்லும்போது ரொம்ப யோசிச்சித் தான் பேசணும். நீங்க அங்கயே அதைக் கிளியர் பண்ணுங்க. பப்ளிசிட்டி பண்ணக்கூடாது. அப்படி செய்றது நம்மளையே நம்மை மேல சாக்கடையை எடுத்துப் போட்டுக்குற மாதிரி. உண்மை தானே.

Also read: இளம் நடிகைகளை வேட்டையாடும் நடிகர்கள்… இயக்குனர்கள் செய்தது என்ன?..

அந்த டைரக்டர் சரியில்ல. அவர் எட்டி மிதிப்பாரு. துப்புவாருங்கறாங்க. ஆனா அவரு உண்மையிலேயே அப்படி பண்ணினாரான்னு தெரியுமா? இப்ப தான் சிஸ்டத்துல போட்டு எல்லாத்தையும் மாத்திடுறாங்களே. அப்ப அது உண்மையா பொய்யான்னு அதைப் பத்தித் தெரியாம நாம பேசவும் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top