மூனு சின்ன பசங்க என்னை படுக்க கூப்பிட்டாங்க!.. நடிகை ஷர்மிளா பகீர் தகவல்...
திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது என்பது பல வருடங்களாக நடக்கும் ஒரு விஷயம்தான். இதுபற்றி அவ்வப்போது சில நடிகைகளில் தாங்கள் சந்தித்த அனுபவங்கள் பற்றி பேசி வருகிறார்கள். சில நடிகைகள் தைரியமாக ‘நான் அப்படிப்பட்ட பெண் இல்லை’ என மறுத்து விடுவார்கள். சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத, அல்லது மார்க்கெட் இல்லாத சில சிறிய நடிகைகள் அல்லது துணை நடிகைகள் வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதம் சொல்வதும் உண்டு. தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் அப்படத்தில் நடிக்கும் நடிகர் என எல்லோரிடமும் அவர்கள் அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டும்.
கடந்த சில வருடங்களாக திரைத்துறையை சேர்ந்த பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச துவங்கியுள்ளனர். மீ டூ இயக்கத்தில் பல துறையை சேர்ந்த பல பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள் பற்றி பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கி தற்போது அம்மா வேடத்தில் நடித்து வரும் நடிகை ஷர்மிளாவும் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ‘கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள். அவர்கள் எல்லோருக்கும் 25 வயதுதான் இருக்கும்.
அவர்கள் சேர்ந்து ஒரு படத்தை தயாரித்தனர். அதில் எனக்கு அம்மா வேடம் இருப்பதாக கூறி கேரளா அழைத்தனர். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. என்னிடம் சேச்சி என மரியாதையாகத்தான் பேசினார்கள். ஒரு நாள் என் டச் அப் பாயை வெளியே போக சொல்லி அவருக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தனர். இதை என்னிடம் அவர் சொல்ல ‘எனக்கே இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. அவர்களை கூப்பிடு’ என்றேன்.
அவர்கள் என் அறைக்கு வந்தனர். இப்போது அவர்களின் முகமே மாறியிருந்தது. எங்கள் மூன்று பேரில் ஒருவரை நீங்களே தேர்ந்தெடுங்கள். அவருடன் நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும்’ என முகத்துக்கு நேராக கேட்டனர். அந்த படத்தில் இனிமேல் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து, என் நண்பர்களின் உதவியுடன் விமானம் மூலம் சென்னை வந்தேன்’ என பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.
இவன் வேற மாதிரி திரைப்படத்தில் கதாநாயகியின் அம்மாவாக ஷர்மிளா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.